மாட்டிக்கினாரு ஒருத்தரு.. ஏதாவது பண்ணுங்க.. அரசியல் "சாணக்கியரை" அவசரமாக சந்திக்கும் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று அரசியல் சாணக்கியர் ஒருவரை விஜய் நேரில் சந்தித்து ரகசியமாக பேச ஆலோசனை செய்து வருகிறாராம். அவரிடம் ஏற்கனவே இதற்கான ஆலோசனைகளை செய்துவிட்டாராம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவர் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சென்றார். கடந்த 2 நாட்களாக விஜய் தனியாக இருந்தார். வெளியே வரவில்லை. யாரையும் சந்திக்கவில்லை. தனியாக இருந்த விஜய்.. தற்போது பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சென்று உள்ளார். இன்று மாலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறார் விஜய்.

TVK Vijay

அங்கே அவர் முக்கிய ஆலோசனைகளை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் , முக்கியமான அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வருகிறது. இந்த நிலையில்தான் அரசியல் சாணக்கியர் ஒருவரை விஜய் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் சாணக்கியர்

இன்று அரசியல் சாணக்கியர் ஒருவரை விஜய் நேரில் சந்தித்து ரகசியமாக பேச ஆலோசனை செய்து வருகிறாராம். அவரிடம் ஏற்கனவே இதற்கான ஆலோசனைகளை செய்துவிட்டாராம். தவெக கரூர் கூட்டம் தொடர்பான நிறைய வழக்குகள் நடக்க உள்ளன.

அதை எதிர்கொள்ள ஆலோசனை தேவை. அதோடு சில சட்ட ரீதியிலான சப்போர்ட் தேவை. அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும் என்று அந்த அரசியல் சாணக்கிய ஆலோசகரிடம் விஜய் கேட்டு உள்ளாராம். விஜய் அதோடு.. நிலைமை கைமீறி சென்றுவிட்டது. பல விஷயங்கள் நினைத்தது மாதிரி இல்லை. பல உயிர்கள் போய்விட்டது. இதற்கு நீங்கள்தான் அரசியல் ரீதியாக உதவி செய்ய வேண்டும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகம் வழக்கு

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய தசரா விடுமுறைக் கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் எஸ். அறிவழகன், செப்டம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நீதிபதி தண்டபாணி இல்லத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணாமலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது வழக்கறிஞர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த நீதிபதி தண்டபாணி, இது ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, நீதிபதி ஜோதிராமனுடன் கலந்துரையாடி, முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டு, எண் அளிக்கப்பட்டால், செப்டம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று வரக்கூடிய நிலையில்தான்.. இன்று அரசியல் சாணக்கியர் ஒருவரை விஜய் நேரில் சந்தித்து ரகசியமாக பேச ஆலோசனை செய்து வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+