Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் குற்றவாளி இல்லை.. சாட்சி மட்டும் தானாம்! சிபிஐ அனுப்பிய சம்மனில் ட்விஸ்ட்! ஆனாலும் ஒரு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்தி உள்ள சிபிஐ விஜயை டெல்லிக்கு வர சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில் இது விஜய்க்கு மிகப்பெரிய பிரச்சினை இல்லை என்கின்றனர் அவரது வழக்கறிஞர்கள். விஜய் சாட்சியாக மட்டுமே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரத்தில் விஜய்க்கு பிரச்சினை தீர்ந்து விட்டதாகவும் அர்த்தமில்லை. விசாரணையில் போது அவர் மாற்றி மாற்றி பேசினால் சந்தேக நபராக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்கின்றனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்று. 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தது தமிழக அரசியலில் இதுவரை அரங்கேறாத ஒன்று.

இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறையில் எஸ்ஐடி விசாரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்படி, சிபிஐ தீவிரமாக விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

Vijay CBI Karur

கரூர் நெரிசல் வழக்கு

கடந்த ஜனவரி மாதம் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மா.செ. மதியழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் என மொத்தம் கரூர் சம்பவம் தொடர்பாக சுமார் 19.30 மணி நேரம் நீண்ட விசாரணையை சிபிஐ நடத்தியது.

தவெக தலைவர் விஜய்

இந்த விசாரணைகள் முடிந்த பின்னர், வழக்கின் அடுத்த கட்டமாக தவெக தலைவர் நடிகர் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, 2026 ஜனவரி 6-ஆம் தேதி விஜய்க்கு எழுத்துப்பூர்வ சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் வெளியான உடனேயே, விஜய் விசாரணைக்கு நேரில் ஆஜராவாரா? அல்லது சிபிஐக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்வரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

விஜய் சிபிஐ சம்மன்

ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நீதிமன்றத்தை நாடவில்லை. இதற்குக் காரணமாக சிபிஐ அனுப்பிய சம்மனின் சட்டப் பிரிவு தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சிபிஐ, விஜய்க்கு BNSS 179 என்ற சட்டப்பிரிவின் கீழ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்தப் பிரிவு, ஒருவரை குற்றவாளியாக கருதி விசாரிப்பதற்கானது அல்ல. மாறாக, நடந்த குற்றம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கலாம், சம்பவத்தின் பின்னணி குறித்து விளக்கமளிக்கக் கூடியவர் என்ற அடிப்படையில், சாட்சியாக விசாரிக்கப்படும் நபர்களுக்கான பிரிவாகும்.

சிபிஐ விசாரணை

அதாவது, சட்ட ரீதியாக தற்போது விஜய் ஒரு குற்றவாளி அல்ல; அவர் ஒரு சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார். இதனால், விஜய்க்கு பிரச்சினையே இல்லையா? என்ற கேள்வி பொதுமக்களிடையே இயல்பாக எழும். ஆனால், உண்மையில் அப்படியில்லை. இதிலும் விஜய்க்கு ஒரு பிரச்சினை உள்ளது என்கிறார்கள் சட்ட நிபுணர்கள் அதற்கு தெளிவான பதிலை அளிக்கிறார்கள். சாட்சியாக விசாரிக்கப்படுவது பாதுகாப்பான நிலை போல தோன்றினாலும், விசாரணையின் போது வழங்கப்படும் தகவல்களில் முரண்பாடு ஏற்பட்டால், விஜய் மீதான குற்றச்சாட்டு மாற்றப்படலாம்.

விஜய் சாட்சி மட்டும்

சிபிஐ விசாரணக்கு விஜய்க்கு ஒத்துழைக்கவில்லை என்றாலோ? மாற்றி மாற்றி பேசினாலோ? அவர் சாட்சியிலிருந்து சந்தேகநபர் (Suspect) என்ற நிலைக்கு கொண்டு செல்லப்படலாம். அப்போது, அவரை குறுக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் சிபிஐ-க்கு கிடைக்கும். இதுவே விஜய்க்கு உள்ள முக்கியமான சிக்கலாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில்தான், விஜய் ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது.

BNSS 179 பிரிவு

BNSS 179 பிரிவின் கீழ் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து உடனடியாக நீதிமன்றம் செல்வது சட்ட ரீதியாக பொருத்தமல்ல என்று அவரது சட்ட ஆலோசகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும், இந்த வழக்கை மாநில அரசிடம் இருந்து சிபிஐ அல்லது நீதித்துறை மேற்பார்வைக்கு மாற்ற வேண்டும் என்று முன்பே கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தற்போது விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்தை நாடினால், அது விஜய்க்கு சாதகமாக இருக்காது என்பதும் வழக்கறிஞர்கள் குழுவின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

விசாரணைக்கு விஜய் ஆஜர்

அதனால், தற்போதைய சூழலில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி, தன் தரப்பு நியாயத்தை தெளிவாக பதிவு செய்வதே சிறந்த முடிவு என விஜய் கருதுவதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில், வரும் 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையின் போது விஜயின் ஒவ்வொரு வார்த்தையும், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வையும், விஜயின் எதிர்கால அரசியலையும் தீர்மானிக்கும் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+