Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது கேவலம்.. விஜய் சூட்டிங் தான் போவார்.. கொந்தளித்த கருணாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இதற்கு எதிராக அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தவெக கட்சி அந்தக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர். இதுகுறித்து விமர்சித்துள்ள திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ கருணாஸ், விஜய்க்கு மக்கள் மீது அக்கறை இல்லை. அவர் சினிமா கூட்டங்களுக்கு மட்டும் தான் வருவார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்த பிறகு கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது அவரின் அரசியல் அறியாமையை தான் காட்டுகிறது. இதற்கு முன்பு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இதிலிருந்து அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு பெரிய பாதிப்பை உணர்த்த போகிறது என்பதை உணராமல் இருக்கிறார். பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்.

vijay-only-go-for-shooting-he-never-care-people-said-karunas

அரசியல் அறியாமை

இது வெறுமனே வாக்குரிமைகளை மட்டுமே நீக்குவதற்கான நோக்கம் இல்லை. இது குடியுரிமையை இழக்க வைப்பதற்கான நடவடிக்கை என்பது எங்களின் குற்றச்சாட்டு. அதற்கு 1,000 ஆதாரங்கள் இருக்கு. இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர்கள் தனித்து விடப் போகிறார்கள். தமிழர்கள் மண்ணை இழந்து, உரிமைகளை இழந்து அனாதைகளாக, அகதிகளாக இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு 40 வருடங்களாக குடியுரிமை வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

வரக்கூடிய காலங்களில் மத்திய அரசு தமிழகத்தை நாதியற்ற கூட்டமாக மாற்றுவதற்கான முயற்சி என்பதை கூட உணராமல், யாரோ எழுதிக் கொடுத்ததை படிப்பத அவரும் தமிழர் என்கிற முறையில் உண்மையில் வேதனையளிக்கிறது. இதில் என்ன நாடகம் இருக்கப் போகிறது. அப்படி நாடகமாக இருந்தால் சினிமா சூட்டிங்கை விட்டு விட்டு நாங்கள் ஏன் இங்கு வரவேண்டும்.

சூட்டிங் தான் போவார்

பீகாரில் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சட்ட வல்லுநர்கள் எல்லாம் இதில் உள்ள அபயாத்தை பற்றி கூறுகிறார்கள். பாஜகவின் சித்தாந்தம் என்ன என்று அனைவருக்கும் தெரியும். ஒரே நாடு, ஆதார் கார்டு என்றவர்கள் இன்றைக்கு ஆதார் கார்டும் அனுமதியில்லை என்கிறார்கள். அவன் நினைத்தால் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள்.

இதில் கூட அரசியல் என்று யார் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்றிருக்கிறது. எந்த சூழ்நிலையில் எது முக்கியமோ அதற்குள் ஒரு அரசியலை பார்ப்பது கேவலமான மனநிலை. அதை அவர் மாற்றிக் கொள்வது நல்லது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் அழைத்து பார்ப்பவரிடம் இதற்கெல்லாம் அழைத்தால் வருவாரா. சூட்டிங் ஏதாவது கூப்பிடுங்கள் வருவார். அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.

குடியுரிமை இழப்பு

கவர்ச்சியின் அடிப்படையில் வேண்டுமானால் அவர் கொஞ்ச காலம் ஓட்டலாம். மக்களுடன் மக்களாக இருப்பவர்களை தான் மக்கள் விரும்புவார்கள். பீகாரில் 65 லட்சம் மக்கள் வாக்குரிமைகளை இழந்துள்ளனர். இதை அவசர அவசரமாக 12 மாநிலங்களில் நிறைவேற்ற பார்க்கிறார்கள். அதற்கு எதிராக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குடியுரிமையை இழக்க வைக்கும் சூழ்ச்சி." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+