அரசியலின் ஆரம்பமே கரும்புள்ளி.. இனி சரிப்பட்டு வராது.. வீக் எண்டு பயணத்தை கைவிட விஜய் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் பிரச்சாரத்தின் போது 39 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய் தனது வீக் எண்டு பயணத்திற்கு எண்டு கார்டு போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

Vijay plans to stop his weekend trip after the Karur Tamilaga Vetri Kazhagam stempede

விஜய் பிரச்சாரம் ஓவர்

முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பார் என்று தகவல் வெளியானது. தற்போது இந்த சம்பவம் காரணமாக விஜய் தனது பயணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் டிசம்பர் 20 வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம், தற்போது பிப்ரவரி 21 வரை தொடரும் என கூறப்பட்டது.

இந்த நீட்டிக்கப்பட்ட பயணத்தின்போது, அவர் 18 சனிக்கிழமைகளிலும், 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். இந்த புதிய கால அட்டவணை, விஜயின் மக்கள் தொடர்பு முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அந்த முடிவை திரும்ப பெற்று.. மொத்தமாக விஜய் தனது பயணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்த தெரியவில்லை, பயணத்தை சரியாக திட்டமிட தெரியவில்லை, இப்போது கூடுதலாக 39 பேர் மரணம் காரணமாக மிகப்பெரிய கரும்புள்ளி ஏற்பட்டுவிட்டது. இதனால் இந்த பயணத்தை தொடர வேண்டாம் என்று விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தவெக விஜய் கூட்டம் - பலர் பலி

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் யார், யார் உயிரிழந்துள்ளனர் என்பது தொடர்பாக விரிவான விவரங்கள் கிடைத்துள்ளன.

கரூரில் நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கலந்து கொள்ள பல்லாயிரக்கணக்கான தவெக தொண்டர்களும், பொதுமக்களும் வருகை புரிந்தனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் தற்போது 34 பேரின் விவரங்கள் கிடைத்துள்ளன

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
1)தாமரைக்கண்ணன் த/பெ முருகேசன், ஒத்தப்பட்டி காலனி, பாகநத்தம், கரூர் வட்டம்

2)ஹேமலதா, க/பெ ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர் வட்டம்

3)சாய்லெட்சனா, த/பெ ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர் வட்டம்

4)சாய்ஜீவா, த/பெ ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர் வட்டம்

5)சுகன்யா, க/பெ தேவேந்திரன், வடிவேல் நகர், காவலர் காலனி, கரூர் வட்டம்

6)ஆகாஷ், த/பெ மாணிக்கம், காமராஜ்புரம் வடக்கு, கரூர் வட்டம்

7)தனுஷ்குமார், த/பெ இளங்கோவன், காந்தி நகர், காந்தி கிராமம், கரூர்

8)வடிவழகன் என்கின்ற வடிவேல், த/பெ முத்துசாமி, 61, மேங்காட்டு தெரு, பசுபதிபாளையம், கரூர் வட்டம்

9)குருவிஷ்னு, த/பெ விமல், வடிவேல் நகர், வேலுச்சாமிபுரம், கரூர் வட்டம்

10)ரமேஷ், த/பெ பெருமாள், கோடங்கிபட்டி, கரூர் வட்டம்

11)சனுஜ், த/பெ ரகு, காந்தி கிராமம், தாந்தோனி கிராமம், கரூர் வட்டம்

12)ரவிகிருஷ்ணன், த/பெ மருதாசலம், பாரதியார் தெரு, எல்.என்.எஸ் கிராமம், கரூர் வட்டம்

13)பிரியதர்ஷினி, த/பெ சக்திவேல், ஏமூர் புத்தூர், ஏமூர் கிராமம், கரூர் வட்டம்

14)தரணிகா, த/பெ சக்திவேல், ஏமூர் புத்தூர், ஏமூர் கிராமம், கரூர் வட்டம்

15)பழனியம்மாள், த/பெ பெருமாள், கே.எ.நகர், 2வது தெரு, 37/2டி கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம், கரூர் வட்டம்

16)கோகிலா, த/பெ பெருமாள், கே.எ.நகர், 2வது தெரு, 37/2டி கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம், கரூர் வட்டம்

17)மகேஷ்வரி, க/பெ சக்திவேல், 9இ லெட்சுமி நகர், அரசு காலனி, அருகம்பாளையம், மண்மங்கலம் வட்டம்

18)அஜிதா, த/பெ மணி என்கிற புகழேந்தி, தொக்குப்பட்டி புதூர், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்

19)மாலதி, த/பெ கிருஷ்ணமூர்த்தி, 86/5 பாரதியார் நகர், சர்ச் அருகில் ராயனூர் வடக்கு, கரூர் வட்டம்

20)சுமதி, க/பெ மணி என்கிற சுப்பிரமணி, 80 அடி ரோடு, 24, ரெத்தினம் சாலை, கரூர் வட்டம்

21)கிருத்திக் யாதவ் த/பெ சரவணன், கருப்பாயி கோவில் தெரு, 5 ரோடு, கரூர் வட்டம்

22)சந்திரா க/பெ செல்வராஜ், ஏழூர் புதூர், கரூர் வட்டம்
விஜயதாரணி, க/பெ சக்திவேல் தாழைப்பட்டி, பிச்சம்பட்டி, கரூர் வட்டம்

23)கிஷோர் த/பெ கணேஷ், வடக்கு காந்தி கிராமம், அன்பு நகர், கரூர் வட்டம்

24)ஜெயா, க/பெ சுப்பிரமனி, ரெட்டிகடை தெரு, வெங்கமேடு, கரூர் வட்டம்

25)அருக்காணி, க/பெ காளியப்பன், ஏமூர் புத்தூர், ஏமூர் கிராமம், கரூர் வட்டம்

26)ஜெயந்தி க/பெ சதீஷ்குமார், மாரியம்மன் கோவில் தெரு, வேலாயுதம்பாளையம், புகளூர் வட்டம்

27)விஜயதாரணி, க/பெ சக்திவேல் தாழைப்பட்டி, பிச்சம்பட்டி, கரூர் வட்டம்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

1)மணிகண்டன், த/பெ பாலாஜி, தீர்த்தம்பாளையம், தாராபுரம் மெயின் ரோடு, வெள்ளக்கோயில், காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்

2)கோகுலபிரியா க/பெ ஜெயபிரகாஷ், செம்மாண்டபாளையம், வெள்ளக்கோவில், காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்

3)சதீஷ் குமார், த/பெ துரைசாமி, ஆவுடையார்பாளையம், காந்தி நகர், கொடுமுடி, ஈரோடு மாவட்டம்

4)ரேவதி க/பெ முருகேசன், கொடுமுடி வட்டம், ஈரோடு மாவட்டம்

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
ஆனந்த், த/பெ முருகன், அரூர் மெயின் ரோடு, சுக்காம்பட்டி, சேலம் மாவட்டம்

2)மேட்டூரை சேர்ந்த ஸ்ரீநாத்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

1)சங்கர் கணேஷ் த/பெ பால்ராஜ், வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை வட்டம், திண்டுக்கல் மாவட்டம்

2)பாத்திபாபானு க/பெ பிரபாகரன், கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+