விஜய் கொடுத்த இம்பேக்ட் வேற லெவல்.. ட்வீட் போட்டது யாருன்னு பாத்தீங்களா?!
சென்னை: Zoho நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானியாக இருக்கும் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜய்யின் வளர்ச்சியைப் பற்றி சுவாரஸ்யமான விஷயத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டை தாண்டியும் விஜய்யின் செல்வாக்கு எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதை தனது டிவீட் வாயிலாக ஸ்ரீதர் வேம்பு விளக்கியுள்ளார்.

டெல்லி விமான நிலையம்
டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது, ஓடிஷாவைச் சேர்ந்த ஒரு பாதுகாவலர் ஸ்ரீதர் வேம்புவின் உடையைப் பார்த்து அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என உணர்ந்து அவரிடம் "சார், விஜய் தளபதி ஜெயிப்பாரா?" என்று கேட்டதாக ஸ்ரீதர் வேம்பு தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் பெயரும், அவருடைய அரசியல் வருகை தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலத்திலும், பிற மாநிலத்தவர்கள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளது.
கிராமத்து விவசாயி
ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊரான மத்தளம்பாறை-யில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விவசாயி அவரிடம் "விஜய் நமது பூத்தில் ஆச்சரியம் ஏற்படுத்தப் போகிறார்" என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சினிமா ரசிகராக இல்லாத அந்த விவசாயி முன்பு அண்ணாமலைக்கு தொண்டராக இருந்தவர் என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
"துக்ளக்" பகுப்பாய்வு சமீபத்தில் கூறியது போல், தமிழ்நாட்டில் விஜய்-யின் அரசியல் வருகை வெறும் "சினிமா" அல்லது "கிளாமர்" என்று ஒதுக்கிவிட முடியாது என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். பல்வேறு தரப்பு மக்களும் மாற்றத்துக்கான நம்பிக்கையை விஜய் மீது வைத்துள்ளனர் என்பதையும் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டினார்.

எக்ஸிட் போல் மீது நம்பிக்கை இல்லை
மூன்று கட்சி போட்டி நிலவும் சூழலில் புதிய கட்சி எல்லா தரப்பிலிருந்தும் வாக்குகளை பிரிக்கும் என்பதால் எக்ஸிட் போல் முடிவுகளை நம்ப முடியாது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். இருப்பினும், அமைப்பு ரீதியான வலிமை மற்றும் பண பலத்தின் காரணமாக திமுக அல்லது அதிமுக-வில் ஒன்று வெற்றி பெறும் என்றே தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இவ்வளவு குறுகிய காலத்தில் விஜய்யின் அரசியல் செல்வாக்கு உயர்வு மிகவும் பாராட்டுக்குறியது என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு போன்ற தொழில்துறை பிரமுகர்கள் விஜய்யின் அரசியல் பயணத்தை கவனமாகக் கவனித்து வருவது தமிழ்நாடு அரசியலில் நடக்கும் மாற்றத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இன் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பில் திளைத்துள்ளது. அனைத்து கட்சிகளும் இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜய்யின் நடவடிக்கைகள் அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் விஜய் உறுதியுடன் இருக்கிறார். அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்த நம்பிக்கை மிகவும் வலுவாக உள்ளது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவர் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளை தீவிரமாக எடுத்து வருவதாக வரும் தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இது விஜய் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தபடவில்லை.
மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு விஜய்யின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
கோயம்புத்தூர்-க்கு வந்த அமெரிக்க டெக் நிறுவனம்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications