யார் இந்த புஸ்ஸி ஆனந்த்.. விஜய்யை ஆட்டி படைக்கிறாரா.. என்ன சொல்ல வருகிறார் எஸ்.ஏ.சி?

விஜய் ரசிகர் மன்றத்தில் தலைதூக்கி வரும் பிரச்சனைகளால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யை புஸ்ஸி ஆனந்த் தான் ஆட்டிப்படைக்கிறார், அவர் சொல்படிதான் விஜய் நடந்து வருகிறார் என்ற பகீர் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டு வருகிறது.

யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?!

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான மறைந்த அஷ்ரப்பின் உதவியாளராக பணியாற்றியவர்தான் புஸ்ஸி ஆனந்த்... அப்போதிருந்தே விஜய்யின் தீவிரமான ரசிகர் இவர்.

புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கவுரவ தலைவராக இருந்து வந்தார்.. அதன்பிறகு தலைவரானார்... 2006-ல் நடந்த தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்சி என்ற தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவானார்.. அதனால்தான் இவர் புஸ்ஸி ஆனந்த என்று அழைக்கப்பட்டார்.

 விஜய் மன்ற தலைவர்

விஜய் மன்ற தலைவர்

எம்எல்ஏவாக இருந்தாலும் விஜய் மன்ற தலைவராக நீடித்து வந்தார்.. பிறகு விஜய்க்கு நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார்.. இதையடுத்து, புஸ்ஸி ஆனந்திற்கு, அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பதவியை விஜய் தந்தார். அதன்பிறகு முழுமையாக விஜய் மக்கள் இயக்க பணியை தற்போது வரை கவனித்து வருகிறார்.

 நாளைய முதல்வர்

நாளைய முதல்வர்

இந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகரின் ஆதரவாளர்கள் "நாளைய முதல்வரே", "வருங்கால முதல்வரே" என்று நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்பு ஒட்ட தொடங்கினர்.. இதனால் புஸ்ஸி ஆனந்த், எஸ்ஏசியின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து விலக்குவதாக அறிக்கை வெளியிட்டார். அப்போதுதான் எஸ்ஏசி அதிருப்தி அடைந்து, தன் மகனை சுற்றி கிரிமினல் இருக்கிறது, இது விஜய்க்கே தெரியாது என்று வருத்தத்துடன் சொன்னார்.

 விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

பிறகு எஸ்ஏசியின் ஆதரவாளர் மீது போலீசில் புகார் அளிக்கும் அளவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்றனர்... இப்போதைக்கு விஜய் மக்கள் இயக்கம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு அணியும், எஸ்ஏசி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருவதால்தான் பிரச்சனைகள் வெடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

 ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

இந்த பிரச்சனைக்கு இன்னொன்றும் காரணமாக சொல்கிறார்கள்.. 1993-ல் திருச்சியில் ரசிகர் மன்றத்தை துவங்கியது ஆர்.கே. ராஜா என்பவர்தான்.. 27 வருஷமாக விஜய்தான் உலகம் என்றே வாழ்ந்து வந்தாலும், முழுக்க முழுக்க எஸ்ஏசியின் நபராகவும் வலம் வந்துள்ளார்.

 புகைச்சல்

புகைச்சல்

இது புஸ்ஸி ஆனந்த்துக்கு எரிச்சலை கிளப்பியதுடன், ராஜாவுக்கே முக்கியத்துவம் தரப்படுவதாக புகார் சொல்லவும், ராஜா அதிரடியாக வெளியேற்றப்பட்டார் ராஜா... இதுவும் எஸ்ஏசி - புஸ்ஸி ஆனந்த் இடையே நடந்து வரும் மனக்கசப்புக்கு ஒரு காரணம் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் விஜய் தரப்பு நிர்வாகிகளும் சிலர் மன வருத்தத்திலும் உள்ளனராம்.

 அறிக்கை

அறிக்கை

அதற்கு காரணம், புஸ்ஸி ஆனந்த்தான்.. எஸ்ஏசி கட்சிக்கு விண்ணப்பிப்பதாக பேட்டி தந்தவுடனேயே, விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டார்.. அந்த அறிக்கையை புஸ்ஸியைதான் விஜய் ரெடி பண்ண சொன்னாராம்.. அதில், சில வார்த்தைகள்தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.. அப்பா என்ற உறவையும் தாண்டி, எதிரி போல கருதி சில வாரத்தைகள் உள்ளதே நிர்வாகிகளின் அந்த மனவருத்தத்துக்கு காரணமாம்.

 ஷோபா

ஷோபா

அதேபோல, ஷோபாவின் பேட்டியும் தேவையே இல்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது.. அந்த பேட்டியும் இதே புஸ்ஸி ஆனந்த் ஏற்பாடு செய்தது தானாம். இப்படி விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல், விஜய் குடும்பத்தை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் புஸ்ஸி ஆனந்த் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் எது உண்மை, எது புரளி என்று தெரியாதபட்சத்தில், விஜய்யே வாயை திறந்தால்தான் உண்டு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+