படத்துலதான் ரீமேக் பண்ணீங்க.. அரசியலிலும் காப்பிதானா? விஜய் வாக்குறுதியை விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: கில்லி, போக்கிரி என கடைசியில் ஜனநாயகன் படமும் ரீமேக் என சொல்லப்படும் நிலையில், தற்போது விஜய் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் காப்பி என நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். சினிமா படங்களை தான் ரீமேக் செய்து வந்தார் இப்போது வாக்குறுதிகளையும் காப்பி செய்ய ஆரம்பித்துவிட்டார் என விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அரசிய களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளும் பிரசாரம், வாக்குறுதிகளை அள்ளி தெளிக்க ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே அதிமுக 3 கட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில் தற்போது விஜய்யும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து இருக்கிறார்.

விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள்
நாளை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை மகாபலிபுரத்தில் தவெக மகளிர் தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் வழக்கம் போல் திமுகவை விமர்சித்து பேசினார். தொடர்ந்து பெண்களுக்கான தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
தனது படங்களில் இலவசங்களுக்கு எதிராக பேசியும், மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுகொடுப்போம் என்று டயலாக் பேசிய விஜய், களத்தில் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தற்போது விஜய் அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை ஆந்திராவில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் காப்பி என்று நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
சந்திரபாபு அளித்த வாக்குறுதிகள்
1. Aadabidda Nidhi: 18 முதல் 59 வயது வரை உள்ள தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ₹1,500 நிதியுதவி.
2. Talliki Vandanam: 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி.
3. Deepam 2.0: ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் கட்டணமில்லாமல் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்.
4. Stree Shakti: A/C, Super Luxury, Ultra Deluxe, Inter-state, Non-stop அனைத்து மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
5.Shakti Teams: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பெண்களை மட்டுமே கொண்ட சாதாரண உடை அணிந்த சிறப்புப் போலீஸ் படைகள்.
மேற்கண்ட 5 தேர்தல் வாக்குதிகளும் விஜய்யின் தவெக தேர்தல் வாக்குதிகளில் இடம்பெற்றுள்ளது. ஆந்திராவில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு லேசாக பட்டி டிங்கிரிங் பார்த்துவிட்டு அப்படியே காப்பி அடிப்பதாக சாடி வருகிறார்கள்.
ஆந்திராவில் தற்போது சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார். படத்தில்தான் தெலுங்கில் ஹிட் ஆன கதைகளை இங்கு எடுத்து ரீமேக் செய்து வியாபாரம் பார்த்து டாப் நடிகர் ஆனீர்கள்.. சினிமாவிலும் அதே காப்பியா என்று விளாசியுள்ள்னார்.
விஜய் கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன?
1. பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்புக்கு தனி இலாகா
2. மதிப்புமிகு மகளிர் திட்டம்: 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும். மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
3. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
4.அண்ணன் சீர் திட்டம்: நம் தங்கைகளின் திருமணத்திற்காக எட்டு கிராம் தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்.
5. காமராஜர் கல்வி உறுதித் திட்டம்: 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை எந்தக் குழந்தையும் கல்வி இடைநிற்றலே இல்லாமல் செல்வதற்காக ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் பொருளாதார உதவித் தொகையாக வழங்கப்படும்.
6. வெற்றிப் பயணம் திட்டம்: அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும், எந்த மூலையிலிருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்துப் பெண்களும் கட்டணமின்றிப் பயணிக்கலாம். மேலும், பேருந்துக்காகக் காத்துக் கிடக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
7. ஜீரோ டாலரன்ஸ் கிரைம்ஸ்: பெண்களுக்கு எதிரான குற்றமே இல்லை என்ற நிலையை உருவாக்க 'ராணி வேலுநாச்சியார் படை' ஏற்படுத்தப்படும். சாதாரண உடையில் இருக்கிற இந்தப் படையைச் சேர்ந்த பெண்கள் 'பாடி கேம்' (Body Cam) உடன் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
8. அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்: பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க 'அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்' அமைக்கப்படும். இந்த 'பாஸ்ட் ட்ராக்' (Fast Track) நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் எதுவும் இனி நிலுவையில் இல்லாத நிலை ஏற்படும்.
9. 'ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ்': 24/7 இயங்கும் மத்திய கட்டளை மையத்துடன் இணைக்கப்பட்ட அவசர காலப் பொத்தான்கள், தனியார் ஷேர் ஆட்டோக்கள் உட்பட அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பொருத்தப்படும். இந்தப் பொத்தான்கள் வழியாக ஐந்து நிமிடத்தில் பதிலும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். சிசிடிவி கேமராக்களும் விளக்குகளும் வெளிச்சமும் இல்லாத இடங்களே இல்லை என்ற வகையில் 'ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ் உருவாக்கப்படும்.
10. விலையில்லா சானிட்டரி பேட்ஸ்: பொது விநியோகம் நடக்கும் இடங்களான ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் விலையில்லா சானிட்டரி பேட்ஸ் (Sanitary Pads) வழங்குவது உறுதி செய்யப்படும்.
11. சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்: நிலுவையில் உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதன் மூலமும், பெண்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்களுக்கு ஐந்து லட்சம் வரை வட்டியில்லா நிதியை வழங்குவதன் மூலமும் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படும். சுய உதவிக்குழுக்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக (MSMEs) மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் வழங்கப்படும்; அதாவது 100% மானியமாகவே வழங்கப்படும்.
12. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு 'பேபி வெல்கம் கிட்' (Baby Welcome Kit) வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications