கரூரில் பலியான 41 பேரின் குடும்பத்தினருக்கும்! தலா ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கினார் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தவெக சார்பில் ரூ 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதை மாமல்லபுரத்தில் நேற்று விஜய் வழங்கினார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். 10 குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேரின் குடும்பத்தையும் விஜய் தத்தெடுப்பதாகவும் அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க மருத்துவச் செலவு, கல்விச் செலவு, திருமணம் உள்ளிட்ட செலவுகளை செய்வார் என்றும் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.

karur vijay insurance

ஆனால் விஜய் சொன்ன நிவாரணத்தையே வழங்கவில்லை என்ற ஒரு விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் அவர் ஆன்லைன் மூலம் தான் அறிவித்த தலா ரூ 20 லட்சத்தை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் போட்டுவிட்டார்.

ஆனால் தன்னை பார்க்க வந்து இத்தனை பேர் பலியாகியிருக்கிறார்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட சொல்லவில்லையே என்ற பேச்சு எழுந்த போது வீடியோ காலில் விஜய் ஆறுதல் சொன்னதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவர் நேரில் செல்லவில்லை. இந்த நிலையில் விஜய் கரூர் செல்ல அனுமதி கிடைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் இதற்காக நீதிமன்றத்தை நாடியிருந்தால் கோர்ட் உரிய அனுமதியை கொடுக்குமாறு காவல் துறைக்கு அறிவுறுத்தியிருக்கும், ஏன் தவெக அணுகவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.

இதனிடையே கரூரில் பாதிக்கப்பட்ட 41 பேரின் குடும்பத்தினரையும் மாமல்லபுரத்திற்கு வரவழைத்தார். அவர்கள் 5 ஆம்னி பேருந்துகளில் கரூரில் இருந்து மாமல்லபுரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு அறை புக் செய்யப்பட்டது. விஜய் நேற்று அந்த ரிசாா்ட்டுக்கு சென்று ஒவ்வொரு குடும்பத்தினரையாக அறைக்கு வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

பலரிடம் காலில் விழுந்த விஜய் கண்ணீர் விட்டாராம். மேலும் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்றாராம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களும் "குழந்தை குட்டியுடன் கூட்டத்திற்கு வந்தது தவறுதான்" என மன்னிப்பு கேட்டனராம்.

விஜய்யிடம் ஆறுதல் பெற வந்து அவருக்கு ஆறுதல் சொன்னதாக பலர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் விஜய் மேலும் என்ன பேசினார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த குடும்பத்தினரின் கல்வி, திருமணச் செலவு, மருத்துவம் உள்ளிட்டவைகளை ஏற்பதாகவும் அவர் தெரிவித்தாராம்.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தவெக சார்பில் ரூ 5 லட்சம் காப்பீட்டிற்கான ஆவணங்களை விஜய் நேற்று நேராகவே வழங்கினாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+