"கடவுளே அஜித்தே" திடீர்னு எழுந்த குரல்.. விக்ரவாண்டி வியந்தது.. டக்குனு திரும்பிய விஜய் - ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் மாநாட்டின்போது, அஜித் ரசிகர்களும் பங்கேற்றிருந்த நிலையில், இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.. இதற்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இரு தரப்பினருமே திரண்டு வந்து கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

விக்ரவாண்டியில் நடந்த விஜய்யின் மாநாடு பேச்சு இன்னமும் ஓயவில்லை.. மேடையில் அம்பேத்கார், பெரியார், காமராஜர் என 3 கட்அவுட்களை வைத்திருந்தாலும், அண்ணாதுரை கட்அவுட் இல்லாததை சிலர் ஆதங்கத்துடன் கூறிவருகிறார்கள். அதேபோல, விஜய் கட்சி ஆரம்பித்ததுமே, பாஜகவின் B டீம் என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

vijay vikravandi ajith kumar

மதச்சார்பின்மை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விஜய் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் சமத்துவம், மதச்சார்பின்மை, இருமொழி கொள்கை என தவெகவின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல ஆளுநர் பதவி நீக்கம் உள்ளிட்ட கட்சியின் செயல் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

"மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறார்கள் என்றும், A டீம், Bடீம் என பிரச்சாரம் செய்து தவெக படையை வீழ்த்திவிடலாம்னு நினைச்சிடாதீங்க' என்றும் விஜய் குறிப்பிட்டிருந்தது, அரசியல் களத்தில் பரபரப்பை கிளறிவிட்டது..

vijay vikravandi ajith kumar

விஜய் குறிக்கோள்: அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை. அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். பாஜகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள் என்று திமுக தரப்பில் பதிலடிகள் தரப்பட்டு வருகின்றன. அந்தவகையில், விஜய் மாநாட்டின் சலசலப்புகள் இன்னமும் அடங்காமல் உள்ளது.

இந்நிலையில், இணையத்தில் கடவுளே - அஜித்தே என்று அஜித் ரசிகர்கள் அதிகமாக சொல்ல துவங்கியிருக்கிறார்கள்.. மாநாட்டின்போது, விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.. அப்போது விஜய் பேசி கொண்டிருந்த போது, மேடை அருகில் இருந்த ரசிகர்கள் திடீரென "கடவுளே - அஜித்தே" என்று முழக்கமிட துவங்கினார்கள்..

vijay vikravandi ajith kumar

கடவுளே அஜித்தே: இதை கொஞ்சமும் எதிர்பாராத விஜய், உடனே பேச்சை நிறுத்தி விட்டு "அமைதி அமைதி" என்பது போல கையை அசைத்தார்... இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்ல, இப்போதெல்லாம் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று சொல்லி வருகிறார்களாம்.

முன்னதாக, இந்த மாநாட்டையொட்டி விக்கிரவாண்டி முதல் வி.சாலையில் விஜய் மாநாடு நடைபெறும் இடம் வரை பெரிய பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.. அதில், ஒரு கட் அவுட்டில் அஜித் ரசிகன்- விஜய் தொண்டன் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+