மோசமான பரிசை எடப்பாடி பழனிசாமிக்கு தந்த விஜய்.. தரை லோக்கலுக்கு இறங்கி அடிக்கும் தவெக! திமுகவே குறி
சென்னை: "விஜய்யின் பேச்சில் ஒரு உறுதித்தன்மை தெரிகிறது.. நான் ஒன்றும் அடங்கிப்போக மாட்டேன், பயந்த கோழையும் இல்லை என்பதை விஜய் சொல்லிவிட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவை படித்து காட்டிய விஜய், உச்சநீதிமன்றம் திமுக அரசின் தலையை குட்டியிருப்பதாக சொன்னது, பொலிட்டிக்கல் மெசேஜ் ஆகும்" என்று தவெக நடத்திய செயற்குழு கூட்டம் குறித்து பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
IBC Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "38 நாள் வனவாசத்துக்குபிறகு தீவிர அரசியலுக்கு விஜய் திரும்பியிருக்கிறார்.. இதன் அறிகுறியாகவே தவெக பொதுக்குழுவை பார்க்க வேண்டியிருக்கிறது. அதிமுகவுக்கும் விஜய் தெளிவாக மெசேஜ் சொல்லிவிட்டார்..

திமுக ஒன்லி டார்கெட்
கூட்டணி கிடையாது.. தவெக, திமுக மட்டும்தான் என்றும் தெளிவுபடுத்திவிட்டார்.. வலிய போய் விஜய்யை ஆதரித்ததற்காக நல்லதொரு பரிசை வாங்கி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இது அதிமுகவுக்கே பின்னடைவு தான்.
நாங்கள் ஒன்றும் சோர்ந்து போய்விடவில்லை, கரூர் சம்பவத்துக்கு முன்பு எப்படி இருந்தோமே, அதுபோலவே தீவிரமாகவே செயல்படுகிறோம் என்ற கூறியிருக்கிறார். ஆனால் ஆதவ் அர்ஜூனா, செந்தில் பாலாஜி, உதயநிதி உட்பட பெயரை சொல்லியே திமுகவை அட்டாக் செய்து பேசியிருக்கிறார்..
தரை லோக்கலுக்கு இறங்கிய தவெக
தரை லோக்கலுக்கு இறங்கி திமுகவை அடிக்கவும் தாங்கள் தயார் என்பதற்கான பேச்சை துவங்கியிருக்கிறார்கள்.. திமுகதான் பிரதான எதிரி.. நாங்கள்தான் திமுகவுக்கு மாற்று.. விஜய்தான் முதலமைச்சர் என்பதையெல்லாம் இந்த பொதுக்குழுவில் தெளிவாக சொல்லிவிட்டார்கள்.. ஆனால், திமுகவைவிட அதிமுகவுக்கு தரப்பட்ட மெசேஜ்தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் பேச்சில் ஒரு உறுதித்தன்மை தெரிகிறது.. நான் ஒன்றும் அடங்கிப்போக மாட்டேன், பயந்த கோழையும் இல்லை என்பதை விஜய் சொல்லிவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை படித்து காட்டிய விஜய், உச்சநீதிமன்றம் திமுக அரசின் தலையை குட்டியிருப்பதாக சொன்னது, பொலிட்டிக்கல் மெசேஜ் ஆகும்..
எடப்பாடி பழனிசாமிக்கு பரிசு
ஆனால், கரூர் சம்பவம் பற்றி கொஞ்சமும் குற்ற உணர்ச்சி விஜய்யிடம் காணப்படவில்லை. குறைந்தபட்சம், அந்த நிகழ்வுக்கு தானும் ஒரு காரணம் என்பதை இதுவரை விஜய் சொல்லவில்லை.. அதற்கு பதிலாக எதிர் தாக்குதலில் இறங்கிவிட்டார்
மொத்தத்தில் விஜய் தனித்து போட்டியிடுவார் என்றே தெரிகிறது.. எடப்பாடியுடன் இணைந்தால், விஜய் போன்ற அரசியல் ஆளுமையை அதிமுகவால் சமாளிக்க முடியாது..
ஒரு உறையில் 2 கத்தி இருக்கவே முடியாது.. விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் எடப்பாடி எப்படி ஏற்றுக் கொள்வார்? எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் என்றால் விஜய்யும் ஒப்புக் கொள்ள மாட்டார். .
விஜய் பலிகடா
கரூர் விஷயத்தில், விஜய் பலிகடா ஆகிவிட்டார் என்றுதான் பெரும்பாலான மக்கள் இன்னமும் நம்புகிறார்கள்.. விஜய் மீது எந்த புகாரும் மக்கள் இதுவரை சொல்லவில்லை.. விஜய்யின் ரசிகர்களை தாண்டி, பொதுஜனங்களுக்கே விஜய் மீது ஒருவித கரிசனம் வந்துள்ளது.. மாறாக திமுக அரசு மீதே கோபம் திரும்பியிருக்கிறது.. இது விஜய்க்கு பிளஸ் பாயிண்ட்டாகவே அமைந்துள்ளது.
ஆனால், கரூர் சம்பவத்தை மிகப்பெரிய அளவில் இந்த தேர்தலில் திமுக கிளப்பும்... எதிர்க்கட்சிகளும் அச்சம்பவத்தை பயன்படுத்தவே செய்வார்கள்.. ஒருவேளை அதிமுகவும் விஜய்க்கு எதிராக பயன்படுத்தலாம்..
நன்றியுணர்ச்சி, நியாய உணர்ச்சி வேணாமா
அதேபோல விஜய் விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கண்டுக்காமல் இருந்திருக்க வேண்டும்.. வெளிப்படையாகவே பலவீனத்தை வெளியில் காட்டிக் கொண்டார்.. சட்டசபையில் திமுக அரசை விமர்சித்தது போல விஜய்யையும் சேர்த்தே அதிமுக விமர்சனம் செய்திருக்க வேண்டும்.
சட்டசபையில் விஜய்க்கு எந்த பிரிதிநிதியும் கிடையாது. அப்படியிருந்தும்கூட, எடப்பாடி பழனிசாமி விஜய்க்காக பரிந்து பேசினார்.. அந்த நன்றியுணர்ச்சிகூட இல்லாமல், அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து கொண்டே போவதாக ஆதவ் அர்ஜூனா தன் பேச்சில் தெரிவித்துள்ளார். நன்றியுணர்ச்சி கூட வேணாம், நியாய உணர்ச்சி இருக்க வேண்டாமா?
அந்த நெருக்கடி நேரத்தில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி, முன்னாள் முதலமைச்சர் தவெகவுக்காக பரிந்து பேசுகிறார் என்றால், அடிப்படை நாகரீகம் வேண்டாமா? கட்டாயம் அதிமுகவுக்கு தவெக நன்றி சொல்லியிருக்க வேண்டும்" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications