விஜய்-யின் டிவீட்.. 'வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம்'.. நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!

Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலம் முழுவதும் அரசியல் நெருக்கடி நிலவி வரும் வேளையில், எந்த கூட்டணி யாருடன் உதவியில் ஆட்சியை அமைப்பார்கள் என்ற பரபரப்பு அரசியல் தலைவர்கள் தாண்டி மக்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் ஆட்சி அமைப்பு குறித்து மௌனம் காக்கும் நிலை அரசியல் வட்டாரங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலிலும், இன்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து விஜய் உற்சாகமான வாழ்த்து செய்தியைப் பகிர்ந்துள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TVK Vijay Vijay tweet 12th students TVK leader Vijay motivation Tamil Nadu 12th results 2025 Vijay success is near message Vijay good things will happen TVK education reward program Vijay diamond earrings students Vijay gold coin award 12th Tamil Nadu political crisis Vijay Vijay breaks silence on students Vijay 10th 12th toppers felicitation Vijay motivational tweet election time TVK student encouragement scheme Vijay victory is certain Tamil Nadu board exam results wish 12 12 10 12

மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விஜயின் செய்தி

விஜய் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!" என்று தொடங்கி மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும், அடுத்த கட்ட உயர்கல்வியை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துள்ளார். அதேவேளையில், எதிர்பார்த்த மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு மனம் தளர வேண்டாம் என்றும், மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் நம்பிக்கை அளித்தார். "உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!" என்று அவர் முடித்தார்.

தவெகவின் தொடர் கல்வி ஊக்கத் திட்டம்

தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் விஜய் தலைமையிலான தவெக கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விஜய் டிவீட் செய்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

2025-ம் ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் பரிசுகளும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்று மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் தனது பலத்தை சேர்த்தது 2026 சட்டமன்ற தேர்தலில் பலத்தை காட்டியுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பரிசுகள்

2025-ம் ஆண்டு நிகழ்ச்சியில் 12-ஆம் வகுப்பில் 600-க்கு 599 மதிப்பெண் பெற்ற ஓவியா என்ற மாணவிக்கும், 10-ஆம் வகுப்பில் 499 மதிப்பெண் பெற்ற சோபியா என்ற மாணவிக்கும் வைரத் தோடுகள் பரிசாக வழங்கப்பட்டன. முந்தைய ஆண்டுகளில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினி என்ற மாணவிக்கு வைர மாலை வழங்கி விஜய் கௌரவித்தார்.

இதோடு அதிக மதிப்பெண் பெற்ற பிற மாணவர்களுக்கு தங்கக் காசுகள், சான்றிதழ்கள் மற்றும் ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து தவெக சார்பில் கௌரவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+