கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசியலில் புதிய கட்சியை தொடங்கி, முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிப்பது என்பது அரிதான சாதனையாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது இடம்பிடித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் சில தலைவர்கள் மட்டும் குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். அந்த பட்டியலில் முதலில் இடம்பிடிப்பவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

Vijay TVK Tamilaga Vetri Kazhagam

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர், 1972-ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1977 சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தார்.

அந்த தேர்தலில் அ.தி.மு.க. 155 தொகுதிகளில் போட்டியிட்டு 130 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமாக 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. தமிழக அரசியலில் அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் நடிகர் என்.டி.ராமராவ் புதிய அரசியல் வரலாற்றை எழுதினார். 1982-ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய அவர், வெறும் ஒன்பது மாதங்களுக்குள் நடைபெற்ற தேர்தலில் களமிறங்கினார்.

1983 சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 289 தொகுதிகளில் போட்டியிட்டு 201 இடங்களில் வெற்றி பெற்றது. சுமார் 46 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சியின் நீண்டகால ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்திய அரசியலில் இது மிகப்பெரிய அரசியல் புரட்சியாக கருதப்பட்டது.

இப்போது அதே வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் இணைந்துள்ளார். 2024-ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியை அறிவித்த அவர், குறுகிய காலத்திலேயே மாநிலம் முழுவதும் கட்சியை வலுப்படுத்தினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் 110 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.

தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காத நிலையிலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே ஆட்சியை அமைத்த தலைவர்களின் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.

தமிழகத்தில் நீண்ட காலமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதிக்கம் நிலவி வந்த நிலையில், அந்த இரு கட்சிகளையும் தாண்டி ஒரு புதிய கட்சி ஆட்சியை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தற்போது விஜய்யின் வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+