ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி?
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகா பயணம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தியது வெறும் ஆன்மிக பயணமா அல்லது அதற்கு பின்னால் பெரிய அரசியல் கணக்கு இருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. விஜய்யின் இந்த பயணம் தேசிய அரசியலுக்கான ஸ்கெட்ச் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றியுள்ள தவெக தலைவர் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மங்களூருவில் விமானம் மூலம் சென்றடைந்த விஜய்க்கு அங்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சாலை மார்க்கமாக கொல்லூருக்கு சென்றபோதும் பல இடங்களில் மக்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
மூகாம்பிகை கோவில்
தமிழகத்தை தாண்டியும் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை இந்த வரவேற்பு மீண்டும் வெளிப்படுத்தியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மூகாம்பிகை அம்மன் கோவில் தமிழக அரசியலிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இந்த கோவிலின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். அந்த வரிசையில் தற்போது விஜய்யும் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவிலில் வழிபாடு செய்ததோடு மட்டுமல்லாமல், சுமார் 1.6 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட காணிக்கையையும் விஜய் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்
இதற்கு முன்பும் திருச்செந்தூர் முருகன் கோவில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு விஜய் சென்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட ஆன்மிக நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படும், அதேநேரத்தில், அரசியல் ரீதியாகவும் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் ஆட்சியை அமைத்துள்ள தவெக தற்போது ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும், எதிர்காலத்தில் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2029 மக்களவை தேர்தல்
குறிப்பாக 2029 மக்களவைத் தேர்தலை மையமாக வைத்து தவெக தனது அரசியல் வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில் வலுவான வெற்றியைப் வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக எல்லைகளை தாண்டிய அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
தேசிய அரசியல்
கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் விஜய்க்கு ஏற்கனவே பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது அவருக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் கிடைத்த இந்த வரவேற்பு, நடிகராக இருந்த காலத்தில் உருவான செல்வாக்கு இன்னும் தொடர்கிறது என்பதை மட்டுமல்லாமல், அரசியல் தலைவராகவும் அவர் கவனிக்கப்படத் தொடங்கியிருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தேசிய அளவிலான கூட்டணி
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகளும், அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், 2029-ல் தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் விஜய் ஈடுபடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதனால் மூகாம்பிகை கோவில் பயணம் வெறும் ஆன்மிக நிகழ்வாக மட்டும் இல்லாமல், தேசிய அரசியலுக்கான பயணத்தின் தொடக்க சிக்னல் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications