ஓபனிங்களயே சொதப்பிட்டாரே விஜய்! வேட்டையாடி மட்டும் தான் சிங்கம் சாப்பிடுமா? உண்மை வேறு!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் விஜய் வேட்டையாடுவதற்கு மட்டும் தான் சிங்கம் வெளியே வரும் வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல எனக் கூறியிருந்தார். மேலும் வேட்டையாடி மட்டும் தான் சிங்கம் சாப்பிடும் எனவும் கூறியிருந்தார். உண்மையில் சிங்கங்கள் வேட்டையாடி உண்பதை விரும்பினாலும் பல நேரங்களில் இறந்த விலங்குகளின் உடல்களை சாப்பிடும் என்பதே உண்மை.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை இன்று நடத்தி இருக்கிறார். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாகவே தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாநாடு தொடங்கியது. மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். தொண்டர்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் காலையில் இருந்தே கடுமையான வெயில் கொளுத்தியதால் 3 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாலை 4.45 மணிக்கு எல்லாம் விஜய் பேச தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே சிங்கத்தின் கதையை சொல்லி தான் பேச்சை ஆரம்பித்தார் விஜய். மாநாட்டில் பேசிய விஜய்," சிங்கம் வேட்டையாட தான் வெளியே வரும் வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் எப்போதும் தனித்துவமானது.
சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசையும் அதிரும். சிங்கம் தன்னைவிட பெரிய எதிரியைத் தான் மோதி வீழ்த்தும். சிங்கம் தனியாவும் வரும், கூட்டமாகவும் வரும், தனியா வந்தாலும் சிங்கம்தான் ராஜா. சும்மா இருந்தாலும், பசிச்சா மட்டும் தான் சிங்கம் வேட்டையாடும். இறந்து போன விலங்குகளை சாப்பிடாது. இது தான் என் அரசியல். இது தான் என்னோட டிக்ளரேசன்" என கூறியிருந்தார்.
எடுத்த எடுப்பிலேயே விஜய் குட்டி கதையுடன் பேச ஆரம்பித்திருந்தாலும் அவரது முதல் பேச்சு முற்றிலும் கோணல் பேச்சாக இருந்திருக்கிறது என்கின்றனர் நெட்டிசன்கள். அதாவது சிங்கம் வேட்டையாடி மட்டும் தான் சாப்பிடும் இறந்த விலங்குகளை சாப்பிடாதே என கூறியிருந்தார் விஜய். ஆனால், உண்மையில் அப்படியல்ல.
இறந்த விலங்குகளையும் சிங்கம் சாப்பிடும் என்பது தான் உண்மை. பெரும்பாலும் வேட்டையாடி சாப்பிடுவதையே விரும்பும் சிங்கங்கள், சில நேரங்களில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் போல இறந்த விலங்குகளின் உடல்களையும் சாப்பிடும். உணவு பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் அவை ஏற்கனவே இறந்து போன விலங்குகளின் உடல்களை சாப்பிடும். மேலும் வயதான சிங்கங்கள் பெரும்பாலும் இறந்த உடல்களை தான் சாப்பிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.












Click it and Unblock the Notifications