விஜய்யுடன் கூட்டணியா.. கொஞ்சமும் யோசிக்காமல் மத்திய அமைச்சர் சொன்ன பதில்! இதை யாரும் எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு என்டிஏ தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கூட்டணியில் விஜய்யை இணைக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்ததையடுத்து, அக்கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் பாஜக இன்னும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஜனநாயகன் படம் தள்ளி போவதற்கு, விஜய்யை கூட்டணியை சேர்க்க முயற்சிப்பதுதான் காரணம் என்று பேச்சுக்கள் எழுந்தன.

Vijay TVK

இப்படி இருக்கையில்தான் இந்த விவகாரம் குறித்து பியூஷ் கோயல் பேசியிருக்கிறார். "தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்கு இழுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள், போவார்கள். அவர்களால் எந்த தாக்கமும் இருக்காது. திரை உலகில் ரசிகர்களை வைத்திருப்பதும் அதை வாக்குகளாக மாற்ற முயற்சிப்பதும் வேறுபட்ட விஷயங்கள்.

விஜய்யுடன் இதுவரை எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் என்டிஏ நடத்தவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜக வெற்றி அடைவது அவ்வளவு கடினம் அல்ல. திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாச்சாரத்தால், அக்கட்சியின் மீது தமிழ்நாடு மிகவும் வெறுப்படைந்துள்ளது" என்று பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+