Vijay: ஒரு நாள் பிரச்சாரம்! அடுத்த நாள் ரெஸ்ட்! தவெகவுக்கே ஓட்டு கேட்காத விஜய்! காங்கிரஸ் தப்பியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நாள் பிரச்சாரம், அடுத்த நாள் ஓய்வு என்ற ரீதியில் தவெக தலைவர் விஜய்யின் நடவடிக்கைகள் இருக்கின்றன. கடந்த 12 நாட்களில் அவர் எத்தனை பிரச்சாரங்களை ரத்து செய்துள்ளார் தெரியுமா?

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. தவெக தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி எப்படியும் ஆட்சியை பிடித்துவிடும் என விஜய் முதற்கொண்டு அரசியலே தெரியாத ரசிகர் பட்டாளம் வரை அனைவரும் நினைத்து வருகிறார்கள்.

vijay campaign cancelled

இந்த நிலையில் 233 தொகுதிகளிலும் (ஒரு தொகுதியில் தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு) விஜய் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வகையில் கடந்த 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தவெக சார்பில் விஜய்க்கு பிரச்சார பயணம் திட்டமிடப்பட்டது.

கடந்த 30- ஆம் தேதி பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய் அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தாய் வீட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.

அங்கிருந்து மாலையில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் வில்லிவாக்கத்தில் அவரது பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அது போல் ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் வில்லிவாக்கம், திநகரில் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. அதையும் ரத்து செய்துவிட்டார்.

ஏப்ரல் 7 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். ஏப்ரல் 8ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

ஏப்ரல் 9ஆம் தேதி கடலூரில் பிரச்சாரம் என அறிவிக்கப்பட்டு அது 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஏப்ரல் 10-ஆம் தேதி காரைக்குடியில் விஜய் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அவர் பிரச்சாரம் செய்ய வந்ததால் ஒரு வார்த்தை கூட பேசாமல் வேட்பாளரை அழைத்து அவரது கையை உயர்த்தி காட்டி, அவருக்கு வாக்களிக்குமாறு செய்கையிலேயே பேசினார். அவரது பேச்சை கேட்க கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் நின்றிருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இன்றைய தினம் கடலூர் பிரச்சாரத்திற்காவது விஜய் குறித்த நேரத்திற்கு வந்து ஏதாவது பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய பரப்புரையும் ரத்தாகியுள்ளது. விஜய் பிரச்சாரம் செய்கிறார் என்பதால் உதயநிதிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

நாளை கன்னியாகுமரியில் விஜய் பிரச்சாரம் என சொல்லப்பட்டுள்ளது. அதுவாவது நடக்குமா இல்லை ரத்தாகுமா என தெரியவில்லை. வரும் 13 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த பிரச்சாரமும் ரத்து என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ், தேர்தல் ஆணையம் அனுமதி கிடைத்தும் இது போல் பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் அனுமதி மறுத்தால் மட்டும் விஜய், பக்கம் பக்கமாக ட்வீட் போடும் விஜய், ரத்து செய்தால் அதற்கான காரணத்தை சொல்வதில்லை.

தேர்தல் பரப்புரை வரும் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மிஞ்சி போனால் இன்னும் 10 நாட்கள் தான் இருக்கின்றன. எனவே வீடு வீடாக போய் தவெகவுக்கு வாக்கு சேகரியுங்கள், வெற்றி வாகை சூடுவோம் என விஜய் பதிவிட்டுள்ள நிலையில் அவரே இப்படி பிரச்சாரங்களை ரத்து செய்யலாமா.

இதுவரை காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என தலைவர்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரங்களை செய்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் ரத்து செய்ததில்லை. அந்த வயதிலும் அவர்கள் அடுத்தடுத்து ஓய்வில்லாமல் பிரச்சாரங்களுக்கு சென்று வந்தனர். தற்போது ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தமிழிசை, சீமான், அன்புமணி கூட ஊர் ஊராக செல்கிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் விஜய் நீலாங்கரை வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு பிரச்சாரத்தை ரத்து செய்தால் எப்படி? மற்ற கட்சிகளாவது நிறைய அறிந்த முகங்கள் இருக்கின்றன. ஆனால் தவெகவில் புஸ்ஸி, ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன், அருண்ராஜ் உள்ளிட்டோரை தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் புதுமுகங்களாகவே இருக்கிறார்கள்.

கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் ஊர் ஊராக போய் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு வெற்றி வாகை சூடுவோம் என விஜய் சொல்வது எப்படி சாத்தியமாகும் என தெரியவில்லை. சொந்த கட்சிக்கே வாக்கு கேட்க வராத இவருடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் அவ்வளவுதான் போலயே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+