தவெக கூட்டத்தில் விஜய் பேச பேச குஷியில் துள்ளிய நிர்வாகிகள்! வேலூரில் திமுகவை சீண்டி பேசி.. பரபரப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று பிப்ரவரி 23ம் தேதி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள அகரம்சேரி பகுதியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான நிர்வாகிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்..
இன்று மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.. இதற்கெனெ சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சுமார் 33 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் இந்த பிரம்மாண்ட கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலூரில் விஜய் பிரச்சாரம்
சேலத்தில் நடைபெற்ற முந்தைய கூட்டத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அசம்பாவிதங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முறை வேலூரில் நிர்வாகிகள் அமரும் இடம் முழுவதும் நிழல் தரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 4900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்விற்கு, க்யூஆர் குறியீடுடன் கூடிய சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனுமதிச் சீட்டு இல்லாத நபர்களுக்கு மைதானத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்..
போலீஸ் கண்டிஷன் - குடிநீர் வசதி
காவல்துறை விதித்துள்ள 20-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காகக் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படவில்லை.
மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்குத் தடையின்றி குடிநீர் வழங்க 50,000 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அவசர மருத்துவத் தேவைகளுக்காக 10 மருத்துவக் குழுக்கள், 30 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் மற்றும் 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
பின்னாடியே பைக்கில் வரக்கூடாது
ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட 500 தன்னார்வலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
தலைவர் விஜய் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் வருகை தந்ததால், அவரது வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் வரக் கூடாது என்று காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது... நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுமார் 900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லைவ் டெலிகாஸ்ட்
அகரம்சேரி முதல் பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் மட்டும் தற்காலிகமாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஊடகங்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, நேரலை ஒளிபரப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் பரப்புரை குறித்து விஜய் முக்கிய உரையாற்ற உள்ளதால் தமிழக அரசியல் களத்தில் இந்த வேலூர் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் கூட்டத்திற்கு வருவதைத் தவிர்த்துவிட்டு நேரலையில் நிகழ்ச்சியைக் காணுமாறு கட்சித் தலைமை கேட்டுக்கொண்டிருந்தது..
விஜய் பேச்சு
சரியாக திட்டமிட்டபடி 12 மணிக்கு விஜய் மேடைக்கு வந்தார்.. நிர்வாகிகளிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. மேடையில் பேசும்போது வழக்கம்போல் திமுக அரசை கடுமையாக சாடினார்.. பிறகு விசில் சின்னத்துக்கே ஓட்டு என்று உறுதிமொழி தந்த விஜய், குட்டிக் கதையோடு தன்னுடைய சுவாரஸ்ய பேச்சை ஆரம்பித்தார்.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து வேலூருக்கு காரில் சென்றார் விஜய். அப்போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் சில இளைஞர்கள் அதி வேகத்தில் பைக்கை ஓட்டி சென்றுள்ளார்கள்.. அப்போது நிலை தடுமாறி நெடுஞ்சாலையில் தவறியும் விழுந்துவிட்டனர்.. எனினும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அசம்பாவிதம் ஆரம்பித்துவிட்டதாக பலரும் விமர்சிக்க துவங்கி உள்ளனர்.
-
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய்! -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
TVK candidate list: தவெக வேட்பாளர் பட்டியல்! கோபியில் ’சீனியர்’ செங்கோட்டையன்! 10வது முறையாக களம் காண்கிறார்! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
ஆதவ் ஆர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்.. வில்லிவாக்கத்தை குறிவைத்தது ஏன்? திமுக அதிமுகவுடன் நேரடி போட்டி -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்?











Click it and Unblock the Notifications