சமாதான பேச்சு தோல்வி.. விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை.. தவெக தலைவர் போடும் பிளான்
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இருவரும் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் வேறு பிளான் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 'டாப்' நடிகராக இருக்கும் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் நுழைந்துள்ளார். அவரது கட்சி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ளது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் களமிறங்கி உள்ளார்.

இதற்கிடையே தான் கடந்த பிப்ரவரி மாதம் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்தார். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
விஜயிடம் விவாகரத்து கேட்ட மனைவி
அதுமட்டுமின்றி சங்கீதாவின் விவாகரத்து கோரியதன் பின்னணி குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின. அதாவது விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் கள்ள உறவு இருப்பதாக சங்கீதா மனுவில் குற்றம்சாட்டி உள்ளார். இந்த உறவை கைவிட கூறியும் அவர் அதனை விஜய் மறுத்துள்ளார். அதோடு சங்கீதாவிற்கு பொருளாதார ரீதியாக விஜய் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சுமூகமாக பிரிய எடுக்கப்பட்ட முயற்சியை விஜய் கண்டுக்கொள்ளாததால் நீதிமன்றத்தை நாடி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளை விசாரணை
இந்த வழக்கு செங்கல்பட்டு 1வது குடும்ப நல நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. அந்த நீதிமன்றத்தில் 4வது வழக்காக விஜய் - சங்கீதா வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. வழக்கில் ஆஜராகும்படி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை சங்கீதா விசாரணைக்கு ஆஜராக அதிக வாய்ப்புள்ளது. அதேவேளையில் நாளைய விசாரணைக்கு விஜய் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் ஆஜராவாரா?
ஏனென்றால் விஜய் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜராகும்போது அது மக்களிடம் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால் விஜய் யோசித்து வருகிறார். இதனால் விஜய் ஆஜராகலாமா? இல்லையா? என்பது பற்றி யோசித்து வருகிறார். அநேகமாக விஜய் தேர்தலை காரணம் காட்டி ஆஜராகாமல் தனது வழக்கறிஞரை அனுப்பி வைத்து விசாரணைக்கு மாற்று தேதியை கோரலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.
ரூ.250 கோடி கேட்கும் சங்கீதா?
முன்னதாக நேற்று முன்தினம் விஜய் மற்றும் சங்கீதா தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு பொதுவாக உள்ள ஜோதிடர் முன்னிலையில் நடந்தது. இந்த சமயத்தில் சங்கீதா தனது மகன் மற்றும் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரூ.250 கோடியை ஜீவனாம்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு விஜய் தரப்பில் ஒப்புக்கொள்ளவில்லை. சங்கீதாவிற்கு ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி மட்டுமே ஜீவனாம்சமாக தருவதாகவும், மகன், மகளை பார்த்து தானே பார்த்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை சங்கீதா தரப்பு ஏற்கவில்லை. இதனால் சுமூகமான விவாகரத்துக்கான சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
விஜய் விவாகரத்து கொடுப்பாரா?
இதற்கிடையே தான் நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர விவாகரத்து வழங்குவதாக கூறினால் வழக்கு விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.
அதேவேளையில் தற்போது சங்கீதா தான் வழக்கு தொடர்ந்துள்ளதால் விஜய் விவாகரத்து வழங்க விரும்பவில்லை என்று நீதிமன்றத்தில் கூறினால் வழக்கு நீண்டகாலம் எடுக்கும். ஆனால் தற்போதைய சூழலில் விஜய் விவாகரத்து வழங்க முடிவு செய்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications