ஏப்ரல் 20ல் நேரில் வாங்க விஜய்.. மனைவி விவாகரத்து கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ல் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி விஜய்க்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் கவனம் செலுத்துவதாக விஜய் அறிவித்துள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார். இதற்கான பணியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
27 ஆண்டு திருமண பந்தம்
விஜய் - சங்கீதா ஆகியோரின் திருமணம் கடந்த 1999 ம் ஆண்டு சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. விஜயின் ரசிகையாக இருந்த சங்கீதா அவரை கணவராக்கினார். இந்நிலையில் தான் கடந்த 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்து கொள்ளும் வகையில் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகையுடன் கள்ள உறவு
அந்த மனுவில், ''விஜய்க்கும், இன்னொரு நடிகைக்கும் கள்ளதொடர்பு உள்ளது. இதனை கண்டித்தும் விஜய் கைவிடவில்லை. கள்ள உறவை கைவிடுவதாக கூறி ஏமாற்றினார். கடந்த 2021 ம் ஆண்டில் இருவருக்கும் இடையேயான கள்ள உறவை கண்டுபிடித்தேன்.
அதன்பிறகு பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வழக்கறிஞர்கள் வழியாக முயற்சித்தேன். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 20ல் விசாரணை
இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் அன்றைய தினம் விஜய் - சங்கீதா ஆகியோரை ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக இருவரிடமும் விளக்கம் கேட்க நீதிமன்றம் முடிவு செய்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஏப்ரல் 20ம் தேதி விஜய் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிட முடிவு செய்துள்ளார். மார்ச் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம். இதனால் விஜய் தனது பிரசார பணியை தீவிரப்படுத்த வேண்டியிருக்கும். இப்படியான சூழலில் தான் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கால் விஜய் ஏப்ரல் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
புது பிரச்சனை
ஏற்கனவே கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதில் சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய் உள்ளார். அதுமட்டுமின்றி புலி படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடி வருமானத்தை விஜய் மறைத்ததாக வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என நீதிமன்றம் கூறியது, ஜனநாயகன் திரைப்படத்துக்கான சென்சார் சான்று விவகாரத்தில் நீதிமன்றத்தில் பின்னடைவு என விஜய் ஏற்கனவே பல சிக்கல்களில் தவித்து வரும் நிலையில் விவாகரத்து விவகாரம் அவருக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications