காதில் இருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம்.. இவங்க ஆண்டது பத்தாதா? நாகையில் திமுக மீது பாய்ந்த விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.. ஏற்கனவே 3 நகரங்களில் பிரச்சாரம் செய்வதாக இருந்த நிலையில், தற்போது வெறும் 2 நகரங்களில் மட்டுமே விஜய் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கனவே திருச்சி மாநாட்டில் பல்வேறு பரபரப்புகள் நடந்த நிலையில், நாகைக்கு விஜய் எப்படி வருவார்? தொண்டர்கள் தொந்தரவு இருக்குமே? என்ற சந்தேகம் நிலவிவந்தது. இந்நிலையில், அவரது நாகை வருகை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வட்டமடிக்கிறது.

விஜய்யின் நாகை சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, கட்சித் தலைமை நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.. அதில், 'விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும்போதும், அவரது வாகனத்தை யாரும் வாகனங்களில் பின் தொடர வேண்டாம்.

Vijay Trichy chartered private Flight

பொதுமக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தின் அருகில் அரசு, தனியார் கட்டிடங்கள், சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பங்கள், வாகனங்கள், கொடி கம்பங்கள், சிலைகள் இருந்தால் அதன் அருகில் செல்வதையோ, ஏறுவதையோ தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியோர்கள், பள்ளி சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். காவல் துறை விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தது.

நாகையில் மின்தடை இன்று

தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தையொட்டி நாகையில் அவர் செல்லும் இடங்களில் முன்கூட்டியே மின்தடை செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் காலை 11 மணிக்கு நாகையில் பிரசாரத்தை திறந்த வாகனத்தில் தொடங்கியிருக்கிறார்..

விஜய்யை பார்ப்பதற்காக ஏராளமான தவெக தொண்டர்கள் முன்கூட்டியே கூடியிருந்தனர். நாகை வாஞ்சூர் ரவுண்டனா முதல் புத்தூர் அண்ணா சிலை வரை நடிகர் விஜய் செல்லும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாஞ்சூர், நாகூர், காடம்பாடி, செல்லூர், புத்தூர், புத்தூர் ரவுண்டானா, புத்தூர் அண்ணா சிலை வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது.

நாகைக்கு விஜய்யின் ரகசிய வருகை

இந்நிலையில், விஜய் நாகைக்கு எப்படி வருகிறார் என்பது கடைசிவரை யாருக்குமே தெரியாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.. நள்ளிரவு 2 மணிக்கு தனி விமானம் மூலம் விஜய் திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கினார்.. இதற்கான அனுமதி முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 9.15 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி ஏர்போர்ட்டுக்கு விஜய் வந்தார்.. இதனால் திருச்சி ஏர்போர்ட்டில் தொண்டர்கள் யாருமே அனுமதிக்கப்படவில்லை. பிறகு 9.30 மணிக்கு அங்கிருந்து விமானத்தில் கிளம்பினார்.. விஜய்க்காக ஒரே மாடலில் 2 கருப்பு கார்கள், 2 வெள்ளை கார்கள் என 4 கார்கள் தயார் நிலையில் நின்றிருக்கின்றன.

சார்டர்ட் விமானம்

அதில் ஒரு கருப்பு காரில் விஜய் ஏறிக்கொள்ள மற்ற கார்களில் பாதுகாவலர்கள், பவுன்சர்கள் சென்றுள்ளார்கள்.. ஏர்போர்ட்டிலிருந்து கிளம்பிய விஜய், புதுகை தேசிய நெடுஞ்சாலை- துவாக்குடி புறவழிச்சாலை வழியாக தஞ்சை நெடுஞ்சாலையை அடைந்து, அங்கிருந்து நாகைக்கு சென்றுள்ளார்.. விஜய்க்கு வழிநெடுக தொண்டர்களும், ரசிகர்களும் வரவேற்பு அளித்தனர்..

இதனிடையே, திருச்சி ஏர்போர்ட்டிக்கு விஜய் வந்திருந்த சார்டர்ட் விமானம், அவருக்கு சொந்தமானது என்கிறார்கள்.. விஜய் நாகைக்கு சென்றுள்ள நிலையில், திருச்சியிலேயே வெயிட்டிங்கில் இருக்கிறதாம்.. திருவாரூர் பிரச்சாரமும் மதியம் 3 முதல் 5 மணி வரை நடக்க உள்ளதால், அதையும் முடித்துவிட்டு, இரவு 10 மணிக்கு, தன்னுடைய விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+