800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகலா?.. ஓரிரு நாளில் முடிவு என தகவல்
சென்னை: முத்தையா முரளிதரன் குறித்த 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதா வேண்டாமா என ஆலோசனை செய்து ஓரிரு நாளில் பதில் அளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. 800 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. குழந்தை பருவத்தில் இருந்து அவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது வரை பேசப்படுகிறது இந்த திரைப்படம்.

படைப்பாளிகள்
இந்த படத்தில் நடிக்கக் கூடாது என தமிழ் தேசியவாதிகளும் படைப்பாளிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். விளையாட்டில் முத்தையா முரளிதரன் என்னதான் சாதனைகள் படைத்திருந்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்ட போது சிரித்து மகிழ்ந்தவர் என்ன சாதித்தாலும் என்ன பயன்?

முத்தையா முரளிதரன்
ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்திருந்தார். இதனால் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என பலர் வலியுறுத்தி வருகிறார்கள். பாரதிராஜா, வைரமுத்து, சேரன், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோர் இந்த படத்தை கைவிட வலியுறுத்தியுள்ளார்கள்.

வைரமுத்து
இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம். நீங்கள் விவேகி என வைரமுத்து தெரிவித்துள்ளார். இவரை போல் சீமான் உள்ளிட்டோரும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்கள்.

அறிவிப்பு
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து விஜய் சேதுபதி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் தொடர்ந்து நடிப்பதா, இல்லை விலகுவதா என விஜய் சேதுபதி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிப்பார் என தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications