200 யூனிட் இலவச மின்சாரத்தில் குழப்பம்.. வந்தது முக்கிய அறிவிப்பு.. எல்லோருக்கும் குட்நியூஸ்
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் விஜய், முதல் நாளிலேயே தேர்தல் அறிக்கையில் அளித்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு அவர் கையெழுத்திட்டார். இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் நிவாரணத்தை அளிக்கும். ஆனால் இதில் பெரும் குழப்பம் காலையில் முதல் இருந்து வந்தது.

500 யூனிட்க்குள் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால் தற்போது அனைவருக்கும் கிடைக்கும் 100 யூனிட் இலவசம் கிடைக்காதா என்பது தான்? இதற்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசானை மூலம் விளக்கம் கொடுத்துள்ளது.
முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள இந்தத் திட்டம் மூலம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பணவீக்கம் மற்றும் நிதிச் சுமை ஆகியவற்றால் பாதிக்கப்படும் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலவச மின்சாரம் மூலம் குடும்பங்களின் மாதாந்திர செலவு கணிசமாகக் குறையும். இந்த அறிவிப்பு பதவியேற்பு விழாவுக்குப் பிறகு உடனடியாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் விவரங்கள்
அரசின் உத்தரவுப்படி, இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அதாவது, இரு மாதங்களுக்கு ஒரு முறை 200 யூனிட் வரை கட்டணம் இல்லாமல் மின்சாரம் கிடைக்கும். இருப்பினும், இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு இந்தப் புதிய சலுகை பொருந்தாது.
இதேவேளையில் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு தற்போதுள்ள கட்டண அமைப்பு தொடரும். இதன் மூலம் தற்போது ஏற்கெனவே இருந்த 100 யூனிட் இலவச மின்சாரம் மட்டும் தொடர்ந்து கிடைக்கும்.
கணக்கீடு
வீடுகளில் பயன்படுத்தும் மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது.
குமார் வீட்டில் 2 மாதங்களுக்கு 499 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், குமார் 299 யூனிட்க்கான மின்சார கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
அருண் வீட்டில் 2 மாதத்திற்கு 520 யூனிய் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், அருண் 420 யூனிட்ககான மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அரசின் நிதி உதவி
இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு கூடுதல் மானியமாக ஆண்டுக்கு ரூ.1,730 கோடி செலவு செய்ய உள்ளது. இது தமிழ்நாட்டின் மின்சாரத் துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றாலும், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு என்ன பலன்?
இந்தத் திட்டம் சாதாரண குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும். மின்சாரக் கட்டணம் குறைவதால் மாதாந்திர செலவு கணிசமாகக் குறையும். இதனால் வீட்டு நிர்வாகம் எளிதாகும். குறிப்பாக, நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் இந்தத் திட்டத்தால் பெரிதும் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் பதவியேற்ற முதல் நாளிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டது, அவர் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் உறுதிப்பாட்டை காட்டினாலும், அனைத்து வாக்குறுதியும் செயல்படுத்த முடியுமா என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.
-
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications