Beast Trailer: அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட்டாகாது.. விஜய் ஏன் அப்படி சொன்னார்?
சென்னை: நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் டிரெய்லர் காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு பீஸ்ட் எனும் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பது எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போடுகிறது. இந்த இரு பாடல்களில் அரபிக் குத்து பாடல் வெகு பிரபலம்.

ரீல்ஸ்
எந்த ரீல்ஸ், ஷார்ட்ஸ் பார்த்தாலும் அரபிக் குத்து பாடலாகவே இருக்கின்றன. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் பீஸ்ட் படத்தின் டிரைய்லர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரைய்லரின் காட்சிகளை கண்டு விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

ஈஸ்ட் கோஸ்ட்
சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் எனும் ஒரு மாலை (வணிகவளாகம்) தீவிரவாதிகள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். அங்குள்ள வாடிக்கையாளர்களை பிணையாக பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே மீடியேட்டராக செல்வராகவன் இருக்கிறார்.

கூட்டம்
இந்த மாலை கைப்பற்றிய போது கூட்டத்துடன் கூட்டமாக விஜய்யும் சிக்கிக் கொள்கிறார். அவர் சாதாரணமானவர் இல்லை. மிகுவும் சிறந்த உளவாளிகளுக்குள் ஒருவர் வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய்யின் திறமை குறித்து வர்ணிக்கப்படுகிறது. அதிரடியாக இறங்கி தீவிரவாதிகளை அடித்து தூள் கிளப்புகிறார் விஜய்.

விஜய்
அமைச்சர் ஒருவர் செல்வராகவனிடம், "அவன் இஷ்டத்திற்கு எல்லாம் செய்யக் கூடாதுனு அமைச்சர் சொல்றாருனு மிரட்டி வைய்யா" என செல்வராகவனிடம் கூற அதற்கு செல்வராகவன், "சார் அவனிடம் மினிஸ்டர் மிரட்டுனாருனு சொன்னா, உங்க பொண்ணையும் பொண்டாட்டியையும் அவனே கொன்றுவிட்டு தீவிரவாதிகள் கொன்று போட்டாங்கன்னு செட் செய்து வச்சிருவான் சார்" என்கிறார்.

அரசியல்
இருந்தாலும் நீங்கள் செய்யும் இந்த அரசியல் விளையாட்டு எல்லாம் நமக்கு செட்டாகாது. நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் ஒரு வீரர் என விஜய் கூறும் டயலாக்கை ரசிகர்கள் வெறிக் கொண்டு ரசித்து வருகிறார்கள். விஜய்யை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து வரும் நிலையில் விஜய் இந்த படத்தில் பேசிய வசனங்கள் தூள் கிளப்புகிறது.

பிரச்சினை
பொதுவாக நாட்டில் நடக்கும் ஒரு சில பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் தூரத்தில் இருந்தும் அவை எட்டப்படாதது போலும் எட்டப்படாமலும் வைத்திருப்பது அரசியல்வாதிகள் என்பார்கள். இதற்கு உதாரணமாக நிறைய சம்பவங்களை சொல்ல முடியும். பல சம்பவங்களில் எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிகளுமே "இது அரசியலுக்காக இப்படி செய்கிறார்கள்" என சொல்வதை கேட்டுள்ளோம்.

தீவிரவாதிகள்
ஒரு மாலை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் தம்மிடம் இருக்கும் வீரர்கள் மூலம் மக்களை மீட்காமல் தீவிரவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் அரசுக்கு எதிராக விஜய் " இது போன்ற அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட்டாகாது" என்கிறார். வரும் 14 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. விஜய் இன்னும் என்னவெல்லாம் மாஸ் காட்டியிருக்கிறார் என்பதை பார்ப்போம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications