கைதான தவெக பெண் நிர்வாகிகளிடம் போனில் பேசிய விஜய்! அந்த வார்த்தையை கேட்டு துள்ளிய நண்பீஸ்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை தொடர்பாக தவெக தலைவர் தம் கைப்பட எழுதிய கடிதத்தை விநியோகித்து கைது செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகளிடம் விஜய் தொலைபேசியில் பேசினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தவெக தலைவர் விஜய் இன்றைய தினம் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம். இவ்வாறு அந்த கடிதத்தில் விஜய் கூறியுள்ளார்.
இந்த கடிதத்தை தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் நகல் எடுத்து பொதுமக்களிடம் கொடுத்தனர். அப்போது போலீஸார் அவர்களை துண்டு பிரசுரம் கொடுக்க அனுமதி மறுத்தனர். ஆனால் தவெகவினர் தடையை மீறி நோட்டீஸை கொடுத்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பெண் நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனிடையே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எடுத்துரைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு பெண் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்தார். பிறகு, பெண் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த நிர்வாகிகள் எல்லாம் விடுதலையானதும், அவர்களிடம் போனில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தைரியமாக இருங்கள். நான் எப்போதும் உங்களுடன்தான் இருக்கிறேன் என பேசினாராம். இதனால் பெண் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications