தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!
சென்னை: முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ வீடியோவில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தை பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன என்று பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். வீடியோ ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்படுவதற்கு முன்பாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடர்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் தமிழில் இடம்பெற்ற வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் இருந்தன.

தமிழ்நாடு அரசு, வாய்மையே வெல்லும், ஆலந்தூர் மெட்ரோ நிலையம் உள்ளிட்ட வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் இடம்பெற்றிருந்தன. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவிலேயே எழுத்துப் பிழையுடன் தமிழ் வார்த்தைகள் இடம்பெற்றது விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதுகுறித்து பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.
பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது. தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏஐ காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.
காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா?
பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என்று தெரிவித்துள்ளார்.
-
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன்












Click it and Unblock the Notifications