திமுகவை தொடர்ந்து செங்கோட்டையனுக்கு வலை வீசிய விஜய்.. படையெடுத்த 'தூதர்கள்'... சுவாரசிய ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இடைவிடாமல் கலகக் குரல் எழுப்பி வரும் அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையனை வளைப்பதற்காக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவிலேயே தமது கலகம் தொடரும் என்றும் வேறு எந்த கட்சிக்கும் தாவப் போவது இல்லை என்றும் கே.ஏ.செங்கோட்டையன் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாம்.

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவர் கே.ஏ.செங்கோட்டையன். இன்றைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் குருவே செங்கோட்டையன்தான். காலச் சக்கரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக உள்ளது.

tvk vijay aiadmk sengottaiyan

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த அதிமுகவாக, 2026- சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்களின் விருப்பம். இதனை எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக தெரிவித்தும் அவர் ஏற்கவில்லை.

இதனால் செங்கோட்டையன் அவ்வப்போது தமது அதிருப்தி குரல்களை வெளிப்படுத்தி வருகிறார். செங்கோட்டையனின் இந்த கலகக் குரல் பகிரங்கமாக வெளியானதைத் தொடர்ந்து முதலில் திமுக தரப்புதான் அவரை தொடர்பு கொண்டது. ஒரு கட்டத்தில் மேலிட சந்திப்புகள் கூட நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்புகளில், தாம் திமுகவுக்கு வர இயலாது; அதிமுகவை ஒருங்கிணைக்கவே விரும்புகிறேன் என செங்கோட்டையன் தரப்பு கூறியதாம்.

திமுகவைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் செங்கோட்டையனை வளைக்கும் முயற்சிகளை மேற்கொண்டதாம். இதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவ தயாராக இருக்கிற- தாவிக் கொண்டே இருக்கிற பிரமுகர்கள் மூலம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாம். அப்போதும் செங்கோட்டையன் தரப்பு, உங்கள் அரசியல் எதிர்காலம், நீங்கள் விஜய் கட்சியிலோ திமுகவிலோ சேருவது என்பது எல்லாம் உங்களது முடிவு. இதில் என்னையும் இழுத்துவிட வேண்டாம்.. அதிமுககாரனாகவே இருந்து சாக விரும்புகிறேன்.. முடிந்த அளவு அதிமுகவை ஒருங்கிணைக்க போராடுகிறேன்.. இல்லை எனில் நடப்பது நடக்கட்டும் என ஆணித்தரமாக பதில் தந்ததாம் செங்கோட்டையன் தரப்பு. இதனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்காக தூது போன இப்போதும் அதிமுகவில் இருக்கிற அந்த பிரமுகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+