எல்லாம் கைமீறி போயிடுச்சே.. டெல்லி உதவியை நாடும் விஜய்.. தூது விடப்படும் தலைகள்.. திமுகவுக்கு செக்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக டெல்லி தலைகளின் உதவியை நாட விஐய் முடிவு செய்து உள்ளாராம்.

கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. விஜய்க்கு எதிராக கடுமையான மனநிலை தமிழ்நாட்டில் தோன்றி உள்ளது. அரசியலை தொடங்கும் முன்பே அஸ்தமனம் ஆகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

TVK Vijay

டெல்லியில் விஜய் நாடும் உதவி

அதிலும் ஒரு கட்டம் மேலே போய்.. விஜய் கைதாகும் வாய்ப்புகளும் உள்ளன. விஜய்க்கு பெரிய அளவில் அரசியல் ஆதரவு, பெரிய அளவில் வழக்கறிஞர்கள் படை சப்போர்ட் இல்லை என்றால், கண்டிப்பாக மிக்பெரிய சட்ட சிக்கல் விஜய்க்கு ஏற்படும். இதனால் விஜய் டெல்லி ஆதரவை நாடி உள்ளாராம்.

இப்போது சமூக வலைத்தளங்களில் influencers வைத்து விஜய் அரசியல் செய்கிறார். ஆனால் வழக்கு தீவிரம் அடைய அடைய அதற்கு வாய்ப்பு குறைவு. இதை வைத்து எதுவும் செய்ய முடியாது. விஜய் இதை சமாளிக்க முறையாக அரசியல் செய்ய வேண்டும். இதற்காக டெல்லியில் சில தலைகளின் உதவியை விஜய் நாடி உள்ளாராம்.

இந்த விவகாரத்தை திமுகவிற்கு எதிராக திருப்பலாமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறதாம் டெல்லி. ஏதாவது ஒரு இடத்தில் இதை வைத்து திமுகவிற்கு செக் வைத்தால் அது செந்தில் பாலாஜிக்கு சரிவாக அமையும் என்பதால்.. அதற்கான திட்டத்தில் டெல்லியும் இருக்கிறதாம். இதனால் விஜய் டெல்லியுடன் கைகோர்க்கலாம் என்கிறார்கள்.

ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், கரூர் நெரிசல் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்; எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அப்பாவி மக்கள், தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள்

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிக்கான விதி, நெறிமுறைகள் வகுக்கப்படும். இந்த நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

ஸ்டாலின் தீவிரம்

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தீவிரமாக இருப்பதால் விரைவில் விஜய் அதிகாரபூர்வமாக சில டெல்லி தலைகளுடன் ஆலோசனைகளை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய தசரா விடுமுறைக் கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் எஸ். அறிவழகன், செப்டம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நீதிபதி தண்டபாணி இல்லத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணாமலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது வழக்கறிஞர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த நீதிபதி தண்டபாணி, இது ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, நீதிபதி ஜோதிராமனுடன் கலந்துரையாடி, முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டு, எண் அளிக்கப்பட்டால், செப்டம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+