லியோவ பாக்கனும்னு சொன்னீங்கல்ல.. நாளைக்கு சென்னை வாங்க! விஜய் செய்யப் போகும் சிறப்பான தரமான சம்பவம்!
சென்னை: நீண்ட இழுபறிக்குப் பிறகு சிவகங்கை அஜித் குமார் காவல் நிலைய கொலை சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருக்கும் நிலையில் அதில் நிச்சயம் விஜய் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித்குமார் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், நகைத் திருட்டு தொடர்பாக தனிப்படை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யாத போலீசார் அஜித் குமாரை இரண்டு நாட்கள் காவல்துறை வாகனத்தில் வைத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அஜித்குமாரை கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர். தமிழக எதிர் கட்சிகளும் இது தொடர்பாக குரல் எழுப்பிய நிலையில் நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அஜித்குமாரை தாக்கியதாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் அஜித்குமாரின் வீட்டுக்கே சென்று ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சிவகங்கை காவல் நிலைய மரணத்தை கண்டித்து போராட்டம் நடைபெறும் என தவெக அறிவித்தது. கடந்த 6ஆம் தேதி அதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் வேறு ஒரு அமைப்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இருப்பதால் வேறு தேதியை கேட்கும் படி காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்ட தேதி மாற்றப்பட்டு நாளை இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு இடையே இந்த போராட்டத்தில் விஜய் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து மாநாட்டையும் நடத்தி முடித்து 250 நாட்கள் கடந்து இருக்கும் நிலையில் விஜய் இதுவரை நேரடியாக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக்கழகம் நாளை போராட்டம் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் போராட்டத்தை முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுவரை எந்தவித ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் விஜய் கலந்து கொள்ளாத நிலையில் விஜயின் முதல் போராட்டம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அஜித்குமாரின் இல்லத்திற்கே விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது விஜய் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட இருக்கிறார். இதனால் நாளை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிர்படுத்தி உள்ளனர்.
-
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்?










Click it and Unblock the Notifications