10 பேரை வச்சிக்கோங்க! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 குடும்பத்தினரை விஜய் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள அவர்களை வேலுச்சாமிபுரத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தவெக செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கரூர் செல்வதற்கான பணிகளில் விஜய் மகிழ்ச்சியாக இறங்கியுள்ளாராம்.

karur Vijay

இந்த தீர்ப்பு வந்ததும் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்தும் நிர்மல் குமாரும் நேற்று வெளியே வந்து நீலாங்கரை இல்லத்தில் விஜய்யை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். புஸ்ஸி ஆனந்த் தார் காரில் வந்து விஜய்யுடன் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினாராம். அவர் பின்னர் புதுவை நோக்கி சென்றுவிட்டார் என்கிறார்கள்.

இந்த ஆலோசனையின் போது அடுத்த கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என நிர்வாகிகள் சொன்னார்களாம். அப்போது விஜய், அடுத்த கட்ட பிரச்சாரத்தை விட கரூரில் மக்களை சந்திப்பதுதான் முக்கியமான விஷயம். ஏற்கனவே நாம் போய் சந்திக்கவில்லை என திமுக நமக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது. இதை உடைக்க கரூர் மக்களை சந்திக்க வேண்டும். அதன்பின்புதான் அடுத்த கட்ட பிரச்சாரம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றாராம்.

எனவே விஜய் விரைவில் கரூர் செல்லவிருக்கிறார். இதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து விஜய் அறிவித்துள்ளார். இந்த குழு உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வேலுச்சாமிபுரத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யுமாம்.

அவர்களுக்கான உணவு, பஸ் உள்ளிட்ட வசதிகளையும் தவெக ஏற்பாடு செய்கிறதாம். எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லாமல் வேலுச்சாமிபுரத்திலேயே அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஏதாவது ஒரு மண்டபத்தில் வைத்து விஜய் சந்திப்பார் என தெரிகிறது.

அதாவது 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு விஜய் ஊக்கத்தொகை கொடுப்பதை போல் பாதிக்கப்பட்ட 41 பேரின் குடும்பத்தினரையும் சந்திப்பார். அவர்களை ஒருங்கிணைத்து பேருந்தில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு பார்த்துக் கொள்ளும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+