விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்!
சென்னை: விஜய் ரசிகர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் ஒவ்வொரு நாளும், மோசமாகிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது புதிய அட்ராசிட்டி ஒன்று இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தனது பெற்றோர் விஜய்க்கு வாக்களிக்காமல், திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதாக கூறியதாகவும், எனவே பெற்றோரின் SIR படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்காமல் மறைத்து வைத்துவிட்டதாகவும் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

விஜய் ரசிகர்கள்
விஜய் அரசியலுக்கு வந்த பின்னர்தான், இளைஞர் கூட்டம் சினிமா நட்சத்திரங்கள் மீது எந்த அளவுக்கு வெறித்தனமாக இருக்கிறார்கள் என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது பிரச்சனை கிடையாது. ஆனால், அந்த சினிமா நட்சத்திரம் சொல்வது மட்டும்தான் உண்மை என்று நினைப்பதுதான் சிக்கல். அப்படித்தான் விஜய் ரசிகர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
புதிய பஞ்சாயத்து
விஜய் பிரச்சாரத்திற்கு, மக்கள் சந்திப்புக்கு வருகிறார் எனில், போக்குவரத்து விதிகளை மீறி அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்குவது. அல்லது விபத்தை ஏற்படுத்துவது, சோஷியல் மீடியாவில், விஜய்க்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை அவதூறு அர்ச்சனை செய்வது என்று தொடர்ந்து பஞ்சாயத்துகளை ஏற்படுத்தியிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அந்த வகையில், தற்போது புதிய பஞ்சாயத்து ஒன்று கிளம்பியிருக்கிறது.
சைக்கோ தற்குறி...😱🤮
— Shafeeq (@shafeeqkwt) April 3, 2026
இந்த தற்குறி, தன் பெற்றோர் TVK-க்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொன்னதால், அவர்களுடைய SIR form-ஐ submit செய்யவே இல்லை. அதையும் ஒரு reel-ஆ பெருமையாக post பண்ணிருக்கான்.
டேய் அறிவு கெட்ட முட்டாள் @TVKVijayHQ
நீ மனித குலத்துக்கே ஒரு அவமானம்டா. pic.twitter.com/euHt3GDwJg
எஸ்ஐஆர் படிவம்
அதாவது இளைஞர் ஒருவர், தனது பெற்றோர் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று சொன்னதால், அவர்களின் எஸ்ஐஆர் படிவதை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்காமல் மறைத்து வைத்ததாக கூறியிருக்கிறார். "சீமானுக்கு ஓட்டு போடுவேன் என்று சொல்லியிருந்தால் கூட, படிவத்தை சமர்பித்திருப்பேன், ஆனால் என்னைக்கு திமுக-அதிமுகவுக்கு ஓட்டு போடுவோம் என்று சொன்னார்களோ.. அன்றைக்கே, இந்த பவடித்தை சமர்பிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்" என்று எஸ்ஐஆர் படிவத்தை கையில் வைத்துக்கொண்டு அந்த இளைஞர் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
சர்ச்சை வீடியோ
இது சட்டப்படி குற்றமாகும். தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் படிவங்கள் அரசு ஆவணங்களாகும். இவற்றை மறைத்து வைப்பது, வேண்டுமென்றே தடுத்து வைப்பது சட்டவிரோதமாகும். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 186, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் கீழ் குற்றமாகும். இது குறித்து தேர்தல் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்படலாம். அவருக்கு 6-12 மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications