விஜய்தான் முதல்வர் வேட்பாளர்! கூட்டணி பற்றி முடிவெடுக்க முழு அதிகாரம்! தவெக பொதுக்குழுவில் தீர்மானம்
சென்னை: தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
விஜய் தலைமையில்தான் தவெக தேர்தலை சந்திக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இன்று காலை நடந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தவெக விஜய் அதிருப்தி
இது போக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) அதிகரித்து வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியே போனால் கட்சியை கலைக்க வேண்டியதுதான் என்று கட்சியின் டாப் நிர்வாகிகளிடம் அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் உள்வட்டாரத் தகவல்களின்படி, முக்கியத் தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே நிலவும் மோதல்கள் குறித்து விஜய் தனது கடும் அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்தி இருக்கிறாராம். அரசியலுக்கு வந்ததிலிருந்து அமைதியான பிம்பத்தைப் பேணி வரும் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் அரசியல் ரீதியாக உடைந்து போய் இருக்கிறார்.
கரூர் விவாகரத்திற்கு பின் தவெகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன. இதையடுத்தே விஜய் இவர்களிடம் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. கட்சிக்கு உள்ளே தொடர்ச்சியாக புறம்பேசுதல்களும், ஈகோ மோதல்களும் கட்சியின் பிம்பத்திற்கும், ஒற்றுமைக்கும் கேடு விளைவிப்பதாக சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் அவர் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கோபம் அடைந்த விஜய்
முக்கியமாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கியசாமியை கடுமையாக கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரையும் தனி தனியாக அழைத்து விஜய் பேசி இருக்கிறார். புஸ்ஸி ஆனந்திடம் பேசிய விஜய், நீங்கள் செய்வது சரியல்ல. கட்சி பொதுச்செயலாராக நீங்கள் என்ன செய்தீர்கள்? கூட்டம் கூட்டுவதை தவிர வேறு என்ன செய்தீர்கள்? கட்சி பொறுப்புகளுக்கு கூட நிர்வாகிகள் போடவில்லை. பல பொறுப்புகள் காலியாக இருக்கின்றன.
விஜய் கோபம்
நீண்ட காலம் தொண்டர்களாக இருந்தவர்களுக்கு பொறுப்புகள் இல்லை. பல பிரிவுகள் உருவாக்கப்படாமல் உள்ளது. நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் ஒரு கேஸ் என்றதும் தலைமறைவாகிவிட்டீர்கள். அப்படியே காணாமல் போய்விட்டீர்கள். நான் கூட பனையூர் வீட்டில் தானே இருந்தேன். கைது நடந்தால் பார்க்கலாம் என்று தானே இருந்தேன்.
வீட்டிற்கு வாங்க என்று போலீசுக்கே சவால் விட்டேனே.. ஆனால் நீங்கள் ஏன் காணாமல் போனீர்கள்? இதுதான் கட்சி நிர்வாகிகள் செய்யும் செயலா? அதுவும் பொதுச்செயலாளர் செய்யும் செயலா? இப்போது சோஷியல் மீடியாவில் சண்டை போட்டுகொண்டு இருக்கிறீர்கள்.. நீங்கள் செய்தது.. செய்வது எதுவும் சரியில்ல என்று விஜய் கோபம் அடைந்து உள்ளார் என்று கூறப்படுகிறது.
இன்று நடக்கும் சிறப்பு பொதுக்குழு
ஏற்கனவே கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, கட்சியின் பணிகளை சரி செய்ய கீழ்காணும் புதிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் இன்று சிறப்பு பொதுக்குழு நடக்க உள்ளது.
1. N.ஆனந்த் பொதுச்செயலாளர்
2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
3. Dr. K.G. அருண்ராஜ் ExBUS கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்
4. CTIL நிர்மல் குமார் இணைப் பொதுச்செயலாளர்
5. A.ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்
6.விஜயலட்சுமி துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் மாவட்டம்
7. A.ராஜசேகர் தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்
8. M.அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர் சென்னை மாவட்டம்
9. M.சிவக்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் அரியலூர் மாவட்டம்
10. A.பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்
11. R.விஜய் சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
12. M.சிவன் மாவட்டக் கழகச் செயலாளர் தருமபுரி மேற்கு மாவட்டம்
13.. M.பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்டம்
14. V.சம்பத்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்
15. M.சுகுமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாகப்பட்டிணம் மாவட்டம்
16. S.R.தங்கப்பாண்டி மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்
17. K.அப்புனு (எ) வேல்முருகன் மாவட்டக் கழகச் செயலாளர் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்
18. B. ராஜ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டம்
19. J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர் புதுக்கோட்டை மத்திய மாவட்டம்
20. A.விஜய் அன்பன் கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
21. R. பரணிபாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
22. V.P.மதியழகன் மாவட்டக் கழகச் செயலாளர் கரூர் மேற்கு மாவட்டம்
23. N.சதிஷ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்டம்
24. K. விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை தெற்கு மாவட்டம்
25. M.வெங்கடேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு கிழக்கு மாவட்டம்
26. S.ராஜகோபால் மாவட்டக் கழகச் செயலாளர் திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
27. S. பாலசுப்பிரமணியன் கழக உறுப்பினர் தூத்துக்குடி
28. டாக்டர். N. மரிய வில்சன் கழக உறுப்பினர் சென்னை மாவட்டம்
-
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications