“நாம் மாற்று சக்தி அல்ல.. முதன்மை சக்தி என்பதை மீண்டும் உணர்த்துவோம்”.. தவெக தலைவர் விஜய் சூளுரை
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபக்தியில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், "மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்." எனத் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 200 அடி நீளமும், 60 அடி அகலம் கொண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. தவெக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை அருகில் பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது.

தவெக மாநாடு 21 ஆம் தேதி மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம்... இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட.. அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துக்கிட்டே இருக்கோம்... வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்... இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்...
— TVK Vijay (@TVKVijayHQ) August 12, 2025
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு. ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு... அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி... மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.
மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்.. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என விஜய் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications