விஜய் வசந்த் வந்துட்டாரு.. சென்னை டூ நாகர்கோவில்..வேறலெவலுக்கு மாறுதா? கன்னியாகுமரி..சபாஷ் கோரிக்கை
சென்னை: நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்று, எம்பி விஜய் வசந்த் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை வந்தே பாரத் ரயில் மீதான வரவேற்பு அதிகரித்தபடியே வருகிறது. அதேசமயம், வந்தே பாரத் ரயில் சேவையை நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை என இயக்கினால் கூடுதல் பலனாக இருக்கும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

கன்னியாகுமரி: ரயில் பயணிகள் சங்கங்கள் இந்த கோரிக்கையை ஏற்கனவே விடுத்திருந்தனர். காரணம், கடந்த 2019-ம் ஆண்டு எம்பி தேர்தலுக்கு பிறகு ஒரு ரயில் கூட குமரி மாவட்டத்துக்கு, திருநெல்வேலி, மதுரை வழியாக பயணம் செய்யும் விதத்தில் இதுவரை அறிவிக்கப்படவில்லையாம்.. அதனாலேயே, இந்த சேவையை விரிவுபடுத்த கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த்தும் தொடர்ந்து இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.. சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிப்பதுடன், தென் தமிழகத்தின் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெறலாம் என்று வலியுறுத்தி வருகிறார்
காரணங்கள்: சமீபத்தில்கூட, தென்னக ரெயில்வேயின் முதன்மை இயக்க மேலாளர் திரு. என். ஸ்ரீகுமார் சந்தித்து, இது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். இதற்கான சில காரணங்களையும் அப்போது முன்வைத்திருந்தார்..
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து. சென்னைக்கு மாணவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காகவும் செல்கின்றனர். நாகர்கோவில் - சென்னை இடையே. மிக அதிகமாக பயணிகள் வருவதால் அவர்களது வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால், தென் தமிழக மக்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்வதற்கு வசதியாக ஹைதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்" என்பதே விஜய் வசந்தின் கோரிக்கையாக இருக்கிறது.
இதே கோரிக்கையை இப்போதும் வலியுறுத்தியிருக்கிறார்.. இன்றைய தினம்கூட, திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் சர்மா நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் ஆய்வுக்காக வருகை தந்த விஜய்வசந்த், கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்...
வேளாங்கண்ணி: குறிப்பாக, "வேளாங்கண்ணி செல்ல வாராந்திர சிறப்பு ரயில் தேவையை வலியுறுத்தினார். ஐதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது, நெல்லை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். கொரோனா காலத்திற்கு முன் இருந்தது போலவே, ரெயில் நிறுத்தங்களை மறுபடியும் செயல்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் அதிகமாக பயணம் செய்யும், விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவிலில் மட்டுமே நின்று செல்வதால் கூடுதலாக ஒரு நிறுத்தம் தேவை.. நாகர்கோவில் சந்திப்பு மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், இந்த ரயில் நிலையங்களை நவீன மயமாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்ற புதுபுது கோரிக்கைகளை விஜய்வசந்த் எம்.பி வலியுறுத்தியிருக்கிறார்.
விதை: ஒருவேளை, நாகர்கோவில் வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்படுமானால், அது தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதுடன், விஜய வசந்த்தின் அடுத்தக்கட்ட அரசியலுக்கும், அழுத்தமான "விதை" போட்டதுபோலவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications