அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் 2ம் இடம் வருவாரா.. ஜோதிமணி சொன்ன கருத்து! திருமாவளவன் கொடுத்த பதிலடி
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக தலைவர் விஜய் 2வது இடத்தை பிடிப்பார் என்ற காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக மக்கள் சினிமா மயக்கத்தில் வாக்களிக்க வாய்ப்பில்லை என்று கூறிய திருமாவளவன், தேர்தலுக்கு பின் விஜய்யின் கதி தெரியும் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என்று 4 முனைப்போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகும் என்று கருதப்பட்ட சூழலில், முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு அத்தனை கணிப்புகளையும் மாற்றியது. இதனால் தவெக தனித்து போட்டியிடும் சூழல் உருவாகி இருக்கிறது.

அதேபோல் தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். விஜய் உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கவில்லை என்றாலும், தவெகவை ஒரு பெரிய சக்தியாக காங்கிரஸ் கட்சியினர் முன்னிறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஜோதிமணி பேசுகையில், சட்டசபை6த் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிபெறாது என்பதால்தன் ஆளுநர் ஆர்என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் அந்த கூட்டணிக்கு 3வது இடம் தான் கிடைக்கும். 2வது இடத்தை விஜய் பிடிப்பார் என்று கூறி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் 200 இடங்களை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய் 2ஆம் இடத்திற்கு வருவார் என்பது ஜோதிமணியின் கருத்து.. மக்கள் தான் தீர்மானிக்கம் சக்தி.. அது தேர்தலுக்கு பின்னரே தெரியும்.. விஜய் ஒரு புகழ்பெற்ற நடிகர்..
அதனால் ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசியலே தலைகீழாக மாறப் போவதை போன்ற தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு இருப்பவர்கள். கடந்த காலங்களில் சினிமா மயக்கத்தில் வாக்களித்ததை போல், தற்போது வாக்களிக்க வாய்ப்பில்லை. கருத்தியலை விரிவாக விவாதிக்கக் கூடிய வகையில் மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications