விஜய் வெளியிட்ட 4.45 நிமிட வீடியோ.. ஆஸ்கார் அவார்ட்ட கொடுடா ட்ரம்ப்பே.. கொந்தளித்த நெட்டிசன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் பெருந்துயர சம்பவம் நடந்து 3 நாட்களாகிவிட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிஎம் சார்.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். அதேபோல் அந்த வீடியோவுக்கு கீழ் பொதுமக்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த விமர்சனங்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TVK Vijay Karur Stampede

இதுவரை தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து ஒரேயொரு இரங்கல் பதிவு மட்டுமே வெளியாகி இருக்கிறது. தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்களோ, அக்கட்சியின் நிர்வாகிகளோ பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. தவெக நிர்வாகிகள் யாரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு கூட வரவில்லை.

ஒரே நாளில் தவெகவினர் மொத்தமாக கரூர் விவகாரம் தொடர்பாக வாய் திறக்காதது விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையே தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்றிரவு எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை எழுதிவிட்டு, டெலீட் செய்துவிட்டார். அந்த பதிவில் வன்முறையை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்துக்களை பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கரூர் பெருந்துயரம் நடந்து 3 நாட்களாகியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் பேசுகையில், எனது வாழ்க்கையில் இவ்வளவு வலி மிகுந்த ஒரு சூழலை எதிர்கொண்டதே கிடையாது,. மனசு முழுக்க வலி.. வலி மட்டும்தான். இனி மக்கள் பாதுகாப்பு மட்டுமே முக்கியம். பாதுகாப்பான இடங்களை மட்டுமே கேட்போம்.

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திப்பேன். மக்களுக்கு எல்லாமே தெரியும்.. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தில் நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். அதனை கடந்து எதையும் செய்யவில்லை.

சிஎம் சார்.. ஏதாவது பழிவாங்க வேண்டிய எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம்.. என்னுடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என்று தெரிவித்துள்ளார். மொத்தமாக 4.45 நிமிடங்கள் உள்ள வீடியோவில் விஜய் பாதிக்கப்பட்ட மக்களிடமும், தாமதமாக வந்ததற்காகவோ மன்னிப்பு கேட்கவில்லை.

இதன் காரணமாக விஜய் வீடியோ பதிவிற்கு கீழ் பல்வேறு தரப்பினர் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். அதில், ஆமா நீ கூட்டத்துக்கு தாமதமா வந்ததுக்கு, பல மணி நேரம் காத்திருந்த கூட்டத்திற்கு சோறு, தண்ணி தராம தவிக்கவிட்டதுக்கு, ரசிகர்கள் மயங்கி விழும்போது கூட மைக்ல "பத்து ரூவா பாட்டில்" னு பாட்டு பாடினதுக்கு எல்லாத்துக்கும் அவர்தான் காரணம் என்று பதில் அளித்துள்ளனர்.

மற்றொரு நபர், படத்துல கூட இந்த மாதிரி நடிச்சது இல்லையேடா.. அண்ணாக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுடா ட்ரம்ப்பே.. என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் விஜய்க்கு கொம்பு மற்றும் கோடாரி கொடுத்து, மக்களே கொலைக்காரன் வருவான்.. கவனமாக இருங்கள் என்றும் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு நபரோ, திரைக்கதை வசனம் பாஜக.. என்றும் பதிவிட்டுள்ளனர்.

இன்னொரு நபர், ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்ல.. நீ எல்லாம் ஒரு தலைவன்.. மக்களை எதிர்கொள்ள வக்கற்ற ஒருவனுக்கு மக்களை ஆள நினைப்பு வேறு.. ஜோக்கர் என்றும், அதேபோல், என்ன எப்பவுமே என் நெஞ்சில் குடியிருக்கும் தானே சொல்லுவ.. இப்ப என்ன அனைவருக்கும் வணக்கம் என்று தொடங்குகிறீர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+