பனையூரில் நடக்கும் கோஷ்டி பூசல்.. ஒரு கூட்டத்தை கூட நடத்த தெரியாதா? புஸ்ஸி ஆனந்த்தை விளாசிய விஜய்!
சென்னை: தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரம் குறித்து உடனடியாக தகவல் கசிந்ததையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை விஜய் விளாசி இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. அதேபோல் பனையூரில் நடக்கும் கோஷ்டி பூசல் காரணமாகவே பாஜக உடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை புஸ்ஸி ஆனந்த் செயல்படுத்த முயன்றததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக பாஜக கூட்டணியில் தவெக இணைவதாக தகவல் கசிந்தது. அரசியல் எதிரி என்று அறிவித்துவிட்டு பாஜக உடன் கூட்டணி அமைப்பதில் முதலில் விஜய்க்கு பெரிய விருப்பம் இல்லை. ஆனால் ஒவ்வொரு நகர்வையும் பார்த்து பார்த்து விஜய் எடுத்து வைத்து வருகிறார். இதனால் பாஜக உடன் கூட்டணி பேசிய போதும் கூட 90 சீட் மற்றும் முதல்வர் பதவி என்று விஜய் தரப்பு டிமாண்ட் வைத்திருக்கிறது.

இந்த டிமாண்ட் காரணமாக அவர்களாகவே பின்வாங்கிட வேண்டும் என்பதே விஜய்யின் கணக்காக இருந்திருக்கிறது. இருப்பினும் பனையூரில் நடக்கும் கோஷ்டி பூசல் புஸ்ஸி ஆனந்த்தை மாற்று திட்டத்தை உருவாக்கிவிட தூண்டியுள்ளது. அதாவது விஜய் சென்னையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட, அப்படியே அருகில் இருக்கும் விருகம்பாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார்.
விஜய்யின் தேர்தல் பணிகளும் ஆதவ் அர்ஜுனா கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெரம்பூரில் விஜய் பிரச்சாரம் செய்யும் பட்சத்தில் அதன் தாக்கம் விருகம்பாக்கம் தொகுதியிலும் எடுபடலாம். ஆனால் தி நகர் தொகுதியில் வெல்வது புஸ்ஸி ஆனந்துக்கு எளிதான விஷயமல்ல. தி நகரில் பாஜக பணியாற்றி வருவதால், அவர்களின் உதவியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மூலமாக பெற முயன்றுள்ளார்.
அப்போது புஸ்ஸி ஆனந்துடன் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இதனை விஜய்யும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கருத்துக்கள், பனையூர் அலுவலகத்திற்கு வருவதற்குள் அந்த தகவல் கசிந்துவிட்டது. இதனால் கொள்கை எதிரியுடன் விஜய் தரப்பு பேசி வருவது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.
இதன்பின்னர் விஜய் புஸ்ஸி ஆனந்த்தை பனையூர் அலுவலகத்தில் வைத்து விளாசி தள்ளியுள்ளார். ஒரு மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கூட ரகசியமாக நடத்த தெரியாதா என்று கேட்டிருக்கிறார். இதன் காரணமாக உடனடியாக புஸ்ஸி ஆனந்த் பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா, சென்னையில் தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தி இருக்கிறார்.
அதேபோல் பாஜக உடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற வாதத்தை உடைக்கவே சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளி வந்த போது, காரில் சன் ரூஃப் மேல் ஏறி கையை காட்டி இருக்கிறார். இது களத்தில் நன்றாக வேலை செய்யும் என்பதை அவரது குழுவினர் கூறிய நிலையில், விஜய் டேமேஜ் கண்ட்ரோல் செய்யும் பணிகளில் ஈடுபட்டதோடு, அடுத்த நாளே விளக்க அறிக்கையையும் கொடுத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications