டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்கள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பொன்ராஜ் மீது விஜய் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

திமுகவின் அரவணைப்பில் இருப்பதாலேயே பொன்ராஜ் இவ்வாறு பேசியிருப்பதாகவும் புகார் மனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார். டிஜிபி அலுவலகத்திற்கு வந்த போது விஜய் கையில் மனுக்களையும் கொண்டு வந்து இருந்தார்.

Vijay Visits DGP Office Demands Strict Action Against Ponraj Over Remarks on Women

மகளிர் குறித்து சர்ச்சை பேச்சு

அரசியல் விமர்சகரும், அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளருமான பொன்ராஜ் தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் பெண்கள் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது தவெக பெண் தொண்டர்களை விபச்சாரிகள் என்று விமர்சித்து பேட்டி அளித்திருந்தார். இதற்கு உடனடியாக தவெக தலைவர் விஜய்யும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்.

அநாகரிக அரசியலின் உச்சமாக தமிழக பெண்கள் மீது மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் இன்று மாலை தவெக தலைவர் விஜய்யே நேரில் சென்று பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

விஜய் நேரில் புகார் மனு

இது தொடர்பாக விஜய் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழக பெண்களைத் தரம் தாழ்ந்து பேசிவரும் திரு. பொன்ராஜ் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை கோருதல் தொடர்பாக.

ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் திரு. பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் திரு.பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.

செங்கோட்டையன் பேட்டி

இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். அப்போது விஜய்யுடன் செங்கோட்டையன் மற்றும் தவெக நிர்வாகிகளும் சென்று இருந்தனர். இது தொடர்பாக செங்கோட்டையன் கூறியதாவது:-

யூடியூப்பில் தரம் தாழ்ந்த வார்த்தைகளை சொல்லி திமுகவுடன் ஆதரவுடன் உறுதுணையோடு பொன்ராஜ், பெண்களை கேவலமாக இழிவுபடுத்தி பேசியது பற்றி டிஜிபியிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜய்யே வந்து புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிராக இப்படி பேசியது நமது தமிழ்ர் பண்பாட்டை குறைக்கும் வகையில் அத்துமீறிய வகையில் இருக்கிறது.

அதானல்தான் விஜய்யே நேரில் வந்து புகார் அளித்து இருக்கிறார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர். நாட்டில் உள்ள மகளிரை இழிவுபடுத்தும் வகையில் பொன்ராஜ் பேசியுள்ளார். திமுகவுடைய பின்புலம் இருப்பதால்தான் பொன்ராஜ் இதுபோல பேசியிருக்கிறார்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+