விஜய்யை காப்பாற்றும் 'பொம்மை' வழக்கு.. ஆளுநர் முட்டுக்கட்டை போட்டாலும் தப்பிக்க வழி இருக்கு! பின்னணி
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் இப்போது குழப்பம் இருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் நேற்று முதல் அழைக்காமல் இருக்கிறார். இந்தச் சூழலில் தான் விஜய்க்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பொம்மை வழக்கின் தீர்ப்பு உதவப் போகிறது. அதென்ன பொம்மை வழக்கு.. அதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழக அரசியலில் இப்போது நம்பர் கேம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் இப்போது 113 என்ற எண்ணிக்கையில் நிற்கிறது. 118 என்ற பெரும்பான்மை பலத்திற்கு இன்னும் 5 இடங்களே தேவைப்படும் நிலையில், ஆளுநர் மாளிகை நேற்று முதலே எந்தவொரு பதிலையும் சொல்லாமல் இருந்தது.

தயக்கம்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்யின் ஆதரவு எண்ணிக்கை 118-க்குக் குறைவாக இருப்பதால் அவரை ஆட்சி அமைக்க அழைக்கத் தயக்கம் காட்டி வருவதாகச் சொல்லப்பட்டது.. ஆனால், இந்திய அரசியல் சாசன விதிகளும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையைக் காட்டுகின்றன.
ஒரு கட்சிக்குத் தெளிவான மெஜாரிட்டி இல்லாதபோது, அதாவது தொங்கு சட்டசபை அமையும்போது, ஆளுநர் யாரை அழைக்க வேண்டும் என்பதற்குச் சர்க்காரியா கமிஷன் ஒரு தெளிவான முன்னுரிமைப் பட்டியலை வழங்கியுள்ளது: முதலில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, பிறகு தனிப்பெரும் கட்சி, அடுத்துத் தேர்தலுக்குப் பிந்தைய புதிய கூட்டணி என்பதே அந்த வரிசை.
என்ன செய்ய வேண்டும்
தமிழகத்தில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், அடுத்து தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்யைத் தான் அழைத்திருக்க வேண்டும். அவருக்கு 118 இடங்கள் கைவசம் இல்லை என்றாலும், அவரை முதலில் அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்குவதே ஆளுநரின் கடமை என்கிறது சர்க்காரியா கமிஷன்.
ஆனால், 118 என்ற நம்பர் இல்லை என ஆளுநர் கூறுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க பொம்மை வழக்குத் தீர்ப்பு! அதாவது முன்பு எல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்குக் கூட மாநில அரசுகளை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரமே இல்லாத சூழல் இருந்தது. அதைத் தான் பொம்மை வழக்கு மாற்றியது. 1989ல் அப்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பொம்மை தலைமையிலான ஜனதா தள அரசை கவர்னர் டிஸ்மிஸ் செய்தார்.
பொம்மை வழக்கு
அந்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. ஒரு முதலமைச்சருக்குப் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் தனது அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு தீர்மானிக்கக் கூடாது. அதைச் சட்டமன்றத்தின் தளத்தில், (ஆங்கிலத்தில் Floor Test என்பார்கள்) வாக்கெடுப்பு மூலம் நிரூபிக்க வேண்டும். ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பத்திற்காக ஒருவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்க முடியாது. ஆளுநர் உள்நோக்கத்துடன் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பதாக அரசியல் கட்சி கருதினால் வழக்கு தொடரலாம்.
சட்டசபையில் தீர்மானிக்க வேண்டும்
அதாவது விஜய்க்குப் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பது சட்டசபையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். தற்போது 113 இடங்கள் விஜய்யின் பக்கம் இருக்கும் நிலையில், பொம்மை வழக்குத் தீர்ப்பின்படி ஆளுநர் பின்வரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்..
விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்து, அவரைப் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டும்.
அந்தப் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் வரை எவ்வித முக்கியக் கொள்கை முடிவுகளையும் எடுக்கத் தடை விதிக்கலாம்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications