சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார்
சென்னை: நடிகர் விஜய்யின் டெல்லி பயணம், வெறும் சிபிஐ விசாரணைக்கானது மட்டுமல்ல, அது தமிழக அரசியலின் திசையை மாற்றப்போகும் ஒரு பெரிய ட்விஸ்ட் இப்போது அம்பலமாகியுள்ளது.. தவெக தரப்பு "யாரோடும் பேசவில்லை" என மழுப்பினாலும், டெல்லி லாபிகளில் நடந்த விவாதங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம்.. அதை பற்றின ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல்தான் நமக்கு கிடைத்துள்ளது.
சென்னையிலிருந்து டெல்லிக்கு விஜய் சென்றடைந்த அன்றைய இரவே, பாஜக தலைமையின் ஏற்பாட்டில் ஒரு முக்கிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.. நாட்டின் முன்னணி தொழிலதிபர் அதானியின் மிக நெருக்கமான நபர் ஒருவர் விஜய்யை தனிமையில் சந்தித்து பேசினாராம்..

டெல்லி சிபிஐ
அந்தச் சந்திப்பில், என்டிஏ கூட்டணிக்குள் விஜய் வரவேண்டியதன் அவசியத்தை அவரது அரசியல் மற்றும் சினிமா எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டி அந்த விஐபி விவரித்துள்ளார்.. குறிப்பாக, "விசாரணையின் போது சில விஷயங்கள் உங்களுக்குப் புரியும்" என மெல்லிய மிரட்டல் தொனியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை, விஜய்யை ஒருவித குழப்பமான மனநிலைக்கே தள்ளிவிட்டதாம்.
அந்த விஐபி சென்றவுடன், தன்னுடன் வந்த வார் ரூம் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் விஜய் தீவிரமாக விவாதித்திருக்கிறார்.. அப்போது பாஜக முன்வைத்த 80 தொகுதிகள், இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவி, 5 மத்திய அமைச்சர்கள் போன்ற சலுகைகள் ஏற்புடையதாக இருந்தாலும், அதில் ஒரு சிக்கல் இருந்தது.. தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புக்கொள்வாரா..? என்பதே அந்தச் சிக்கல்..
அதானி தூதுவர்
டெல்லிக்கு கட்டுப்படாத 'அழுத்தக்காரராக' எடப்பாடி இருக்கும் சூழலில், அவர் தரும் உறுதிமொழியே இறுதியானது என்பதை விஜய் உணர்ந்திருந்தார்.. "அதிமுகவின் ஒப்புதலை முதலில் பாஜக வாங்கட்டும்" என்ற தகவலை அதானி தரப்பு விஐபி-க்கு விஜய் அனுப்பி வைத்தாராம்.
மறுநாள் சி.பி.ஐ. விசாரணைக்காக அதன் அலுவலகத்துக்கு விஜய் செல்லும் வரையில் அந்த வி.ஐ.பி.யிடமிருந்து பதில் வரவில்லை.. அதேசமயம், விசாரணைக்கு ஆஜரானார் விஜய். விசாரணையில் பெரிதாக எந்த ஒரு ஹாட்டான சம்பவங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்படவில்லை. ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளின் தொடர்ச்சியாக, சாதாரணமாக கேட்கப்பட்டிருக்கிறது.
சிரித்தபடி வெளியே வந்த விஜய்
ஏற்கனவே ஆஜராகும் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதிலை சொல்லியிருந்தாரோ அதை நன்றாகவே நினைவில் வைத்திருந்தார் விஜய். காரணம், அப்போதும் இப்போதும் சொல்லும் பதில்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். காண்ட்ராவெர்சி இருக்கக்கூடாது. முரண்பாடு இருந்தால் விஜய் பொய்ச் சொல்வதாக எடுத்துக்கொள்ளப்படும். அதனால் சொன்ன பதில்களும், சொல்லும் பதில்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என விஜய்யிடம் வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியிருந்ததால் அதில் கவனமாக இருந்தாராம் விஜய்.
அப்போதுதான் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்க்கு, முதல் நாள் இரவு நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக மதிய உணவு இடைவேளையில், "பாஜக கொடுத்த உத்தரவாதத்தை அதிமுக ஏற்கவில்லை" என்ற தகவல் கிடைத்துள்ளது..
பாஜக அழுத்தம்
ஒருபுறம் பாஜகவின் அழுத்தம் இருந்தாலும், எடப்பாடியின் இந்த "நோ" என்ற ஒற்றை வார்த்தை விஜய்க்கு பெரும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.. இதனால் மதியத்திற்குப் பிறகு நடந்த விசாரணையில் அவரது சினிமா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பங்களை கேட்டு ரசித்தபடி இருந்துள்ளனர் அதிகாரிகள். அதிலேயே நேரம் வெகுவாக கடந்து போனது.
மாலை 6 மணி ஆனதும் நீங்கள் போகலாம், தேவைப்பட்டால் சந்திப்போம் என சிரித்தபடியே விஜய்யை அனுப்பி வைத்துவிட்டார்களாம்.. விசாரணையில் கிடுக்கிப்பிடி எதுவும் இல்லாததும், அதிமுக ஒப்புக்கொள்ளவில்லை என்பதும்தான் விஜய்யை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது. அந்த மொமண்ட்டை பிரதிபலிக்கும் வகையில்தான் அவர் காரில் நின்றபடி கையை ஆட்டி வெளியே வந்துள்ளார் விஜய்..
தவெக விஜய் - அதிமுக கூட்டணி
ஆக, விஜய்யின் டெல்லி விசிட்டில் நடந்துள்ள பிரத்யேக தகவல்களை நம்மிடம் சுட்டிக்காட்டுகிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள். அதனால், கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்று விளக்கம் தரும் தவெக தரப்பின் பேச்சு பொய்யானது என்றும் தவெக தரப்பிலேயே சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், 234 தொகுதிகளுக்கும் வலிமையான வேட்பாளர்களை தவெக சார்பில் நிறுத்த விஜய்யிடம் ஆட்கள் இல்லை என்கிற எதார்த்தத்தை விஜய்யும் விஜய்யை சுற்றியிருப்பவர்களும் உணர்ந்துள்ளனர். அதனாலேயே கூட்டணிக்கு செல்லவும் அவர் தயார் தான் . ஆனால், பாஜக அல்லாத அதிமுக எனில் அக்கட்சியுடன் கூட்டணிக்குச் செல்ல இப்பவும் விஜய் தயார்தான்.
கூட்டணியிலிருந்து பாஜகவை நீக்கிவிட்டு, பாஜக அல்லாத அணியை புதிதாக கட்டமைக்கும் துணிச்சலான முடிவை அதிமுக தலைமையால் எடுக்க முடியுமா? என்பதுதான் இப்போதைய கேள்வி என்று தவெக தரப்பில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. மொத்தத்தில், விஜய்யின் டெல்லி விசிட் ஒரு புதிய அரசியல் கூட்டணிக்கான தொடக்கப்புள்ளியா அல்லது முற்றுப்புள்ளியா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
- சிறப்பு நிருபர் எழில்
-
கன்னியாகுமரியில் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகளை விஜய் கைப்பற்றுகிறார்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்! -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய ஜனநாயகன்.. அதிர்ச்சியில் உறைந்த தவெகவினர்! விஜய்க்கு சோதனை மேல் சோதனை -
நேர்ல வரலனாலும் நேராகவே பேசுறாரே! ஹாலோகிராமில் கும்பகோணத்தை அதிரவைத்த AI விஜய் -
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
கன்னியாகுமரியில் இன்று விஜய் அதிரடி! மதியம் 2 மணிக்கு தொடங்கும் மெகா பிரசாரம்.. ரூட் மேப் இதோ -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார்












Click it and Unblock the Notifications