பெரம்பூரில் விஜய்.. மக்களின் பெரிய பிரச்சனை என்ன?- ‘பிகில்’ கவனிப்பாரா?
சென்னை: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் முக்கியமான மக்கள் பிரச்சனைகள் என்ன? அங்கே வசிக்கும் மக்களுக்கு எது அத்தியாவசிய தேவையாக உள்ளது?
நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் சி.ஜோசப் விஜய் போட்டியிருக்கிறார். இந்தத் தொகுதியில் அவர் தாக்கல் செய்த மூன்று வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இறுதியாக அவர் தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் அவர் திருச்சி கிழக்குத் தொகுதியிலும் போட்டியிருக்கிறார். வயது குறிப்பிட்டதில் வேறுபாடுகள் இருந்தது சமூக ஊடகங்களில் சர்ச்சையானதால், அதனை மாற்றி அவர் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 66 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 47 பேர்களின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது எனவும் 17 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் 2 பேர் மனுவைத் திரும்பப் பெற்றுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திலக பாமா இங்கே நிறுத்தப்பட்டுள்ளார். ஒரு நட்சத்திர வேட்பாளர் என்ற அடையாளத்தைத் தாண்டி, தவெகவை தொடங்கி, முதன்முறையாக விஜய் தேர்தலில் களம் காண்பதால் பெரம்பூரில் வாக்காளரிடையே ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது தவிர சோஷியலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இன்டியா (கம்யூனிஸ்ட்) கட்சி, தக்கணம் கட்சி, நாம் தமிழர் கட்சி, வீரத் தீயாகி விசுவநாத தாஸ் தொழிலாளர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் முரசு கட்சி என பலர் களத்திலிருந்தாலும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் ஜோசப் விஜய் ஆகிய இருவருமே அதிகம் அறியப்பட்ட வேட்பாளராகக் களத்தில் உள்ளனர்.
இதில் தமிழ் தெலுங்கு தேசிய கட்சி என்ற கட்சிகூட தன் வேட்பாளரை இங்கு நிறுத்தியுள்ளது. ஆர்.டி.சேகர் கடந்த 2021 தேர்தலில் 105,267 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதில் பாதி அளவே அதிமுகவுக்குக் கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் ஆர்.டி.சேகர் கையில்தான் தொகுதி இருந்தது. அப்பொழுதும் அவர் ஒரு லட்சம் வாக்குகளை அள்ளியிருந்தார். அதிமுக 38 ஆயிரம் வாக்குகளே பெற்றது.
மொத்த வாக்காளர்கள்?
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி, பார்வதி நகர் ஆகிய வார்டு மக்கள் வாக்காளர்களாக உள்ளனர். இங்கே தினக்கூலி மற்றும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். அடித்தட்டு மக்கள் அதிகம் புழங்கும் தொகுதியாக இது கருதப்படுகிறது. சுமார் வாக்காளர்கள் 2,22.792 உள்ளனர்.
இந்தத் தொகுதி பிரிட்டிஷ் இந்தியா காலத்திலிருந்தே இருக்கும் ஒரு பழமையான நகரம். இங்கே உள்ள மிகப்பெரிய பிரச்சனை கொடுங்கையூர். அது 40 ஆண்டுகாலமாக உள்ள மக்களின் துயரம் என்றே சொல்லப்படுகிறது. இங்கே உள்ள குப்பைக் கிடங்குதான் மக்களின் மூச்சுக்கும் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடியதாக உள்ளது. தினமும் அங்கே மக்கும் குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்தும் நடைமுறையை மாநகராட்சி செயல்வடிவம் தர உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.
அது மட்டும் நடைமுறைக்கு வந்தால் அப்பகுதி மக்கள் புகை மூட்டத்தின் நடுவே மூச்சு திணறிப் போய் திண்டாடக் கூடும் என்கிறார்கள் அங்குள்ள சமூக செயற்பாட்டாளர்கள். இந்தக் குப்பை எரிப்பதால் பெரம்பூர் மட்டுமல்ல; வடசென்னை முழுக்கவே அது ஒரு சுற்றுப்புற சுகாதார பிரச்சனையாக உருவெடுக்கக் கூடும். இப்போது உள்ள கொடுங்கையூர்க் குப்பை மேட்டை பயோ மெயினிங் முறையில், மீட்டெடுத்தால் 250 ஏக்கர் நிலமானது அரசுக்குக் கிடைக்கும்.
கொளத்தூர் தொகுதி மக்களுக்காக இயங்கிவரும் அரசு புறநகர் மருத்துவமனை போன்று ஒரு தனி மருத்துவமனையைக் கேட்டு இம்மக்கள் கோரிக்கை விடுகின்றனர். சாலை வசதி எனது, போக்குவரத்து நெரிசல் என்பது இந்தப் பகுதி மக்களின் வாழ்வை முடக்கும் அளவுக்கு உள்ளது. அதைச் சீராக்கித் தரவேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர்.
அதை எல்லாம் விட இங்கே உள்ள கணேசபுரம் ரயில் சுரங்கப்பாதை உலக அளவில் பிரபலமானது. அது எப்படி என்றால், சின்ன மழைக்கே அங்கே நீர் வெள்ளம் போல் தேங்கிவிடுவதால் ஒருவர் சைக்கிளில் போவதே பெரிய கஷ்டமாகும். இங்கே ஒரு மேம்பால வசதியை அந்த மக்கள் 20 ஆண்டுகள் மேலாகக் கேட்டுப் போராடி வருகின்றனர்.
மக்களின் நிலை மாறுமா?
அடுத்து முல்லை நகர், போக்குவரத்து பிரச்சனை. மகாகவி பாரதியார் புதிய பேருந்து நிலையம் மிகச் சிறப்பாக இந்த ஆட்சிக் காலத்தில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று குறைகூறுகின்றனர் மக்கள். பெரம்பூர், சர்மா நகர் ஆகிய பகுதிகளிலிருந்து தென் சென்னைக்குப் பயணிக்க முறையான பஸ் வசதி இல்லை.
இன்னும் சொல்லப்போனால் இருகச்சேரியிலிருந்து பெரம்பூர் ரயில் நிலையம், அண்ணா சாலை, திருவான்மியூர், கிண்டி செல்லக்கூடப் பேருந்துகள் இல்லை என்கிறார்கள். மேலும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் ஆகிய மூன்று தரப்பு மக்களும் தங்களின் சுடுகாடு அல்லது இடுகாட்டை முறையாக நவீனமாக மாற்றித் தரவேண்டும் எனக் கேட்கின்றனர். இத்தொகுதியில் கால்பந்தாட்ட வீரர்கள் அதிகம்.
அவர்கள் தங்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என்கிறார்கள். பயிற்சி மையம், விளையாட்டு மைதானம் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதற்கான செயல் திட்டங்களை திமுக அரசு எடுத்துவருகிறது. எருக்கஞ்சேரியில் மினி ஸ்டேடியம் மற்றும் விளையாட்டு மைதானம் அனைத்திற்குமான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
'பிகில்' படத்தில் மூலம் விளையாட்டு கதைக்களத்தை மையமாக வைத்து நடித்த விஜய், நிஜத்தில் இங்கே உள்ள சர்வதேச தரத்திற்குத் திறமை கொண்டுள்ள இளைய சக்திகளை அடையாளம் கண்டு உயர்த்திவிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் இளைஞர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.
-கடற்கரய்
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. விஜய் அரசியலில் அடுத்த அதிர்ச்சி திருப்பம் -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
லீக்கான ‘ஜனநாயகன்'.. வலைதளங்களில் பரவும் 5 நிமிட காட்சிகள்.. விஜய் – படக்குழுவுக்கு அதிர்ச்சி -
விஜய்க்கு ‘மெச்சூரிட்டி' இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணி -
'காப்பி-கேட்' கிங்? அரசியலிலும் ரஜினி பாணி.. பாடலை வாரி சுருட்டி விஜய்? -
"கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருங்க.." புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்! -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.. நெல்லையில் விஜய் சொன்ன முக்கிய விஷயம்! -
மீண்டும் மீண்டுமா? விஜய் பரப்புரையில் தொடரும் விதிமீறல்கள்.. நெல்லையில் மட்டும் 5 விபத்துகள்












Click it and Unblock the Notifications