விஜய் அசுர பலம் பெறுவார்.. திமுக அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் நெட்டிசன்களின் கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அதிமுக இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று இரு தரப்பில் இருந்து குரல்கள் எழத்தொடங்கி உள்ளன. இதனை நாட்களாக யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ, அவர்களுடனே சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் இரு கழகங்களுமே பரிசீலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில் சாத்தியப்படுத்தினால், அது இருகட்சிகளுக்குமே மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதால், அமைதியாகிவிட்டன. திமுக வெளிப்படையாகவே கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. இந்த சூழலில் திமுக அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் நெட்டிசன்களின் கருத்தை பார்பபோம்.

திமுக அதிமுக கூட்டணியை ஆதரிககும் நெட்டிசன் ஒருவர் இதுபற்றி கூறும் போது, "தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம் கருதியும், தங்கள் கட்சிகளின் இருப்பு கருதியும், அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் உடனடியாக ஒரு கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும்.

Vijay Will Gain Immense Strength The Opinion of Netizens Supporting the DMK-AIADMK Alliance

40 சதவீதம் தாண்டிவிடும்

தமிழக வெற்றிக் கழக இப்போது ஆட்சி அமைக்க அனுமதிக்கப்பட்டால், 2029 மற்றும் 2031 ஆகிய ஆண்டுகளில் அவர்களின் பலம் பலமடங்கு அதிகரிக்கும். ஆட்சியில் இருப்பதால் அவர்களுக்கு அதிக வளங்கள் கிடைக்கும், புதிய கூட்டணிகள் சேரும், மேலும் இளம் வாக்காளர்களின் ஆதரவும் அவர்களை நோக்கித் திரும்பும். ஒரு கட்டத்தில் அவர்களின் வாக்கு வங்கி 40 சதவீதத்தைத் தாண்டி, மற்ற கட்சிகளை முழுமையாகப் பின்னுக்குத் தள்ளிவிடும்.

வாக்கு வங்கி குறையும்

மறுபுறம், திமுக மற்றும் அஇஅதிமுக தங்களின் கூட்டணிக் கட்சிகளையும், இளம் வாக்காளர்களின் ஆதரவையும் இழக்க நேரிடும். அவர்களின் வாக்கு வங்கி முறையே 30% மற்றும் 20%-க்கும் கீழ் குறைந்து, அவர்கள் நிரந்தர எதிர்க்கட்சியாக முடங்கிப் போகக்கூடும்-அல்லது வேறொரு கட்சி அந்த இடத்தைப் பிடிக்கும்போது முழுமையாகத் துடைத்தெறியப்படலாம்.

பிடிவாதம் வேண்டாம்

கிரிக்கெட் விளையாட்டில் நீங்கள் 100% தோல்வியடையும் நிலையில் இருக்கும்போது, திடீர் மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உங்களுக்கு ஒரு மறுவாய்ப்பு கிடைத்தால், "இல்லை, ஆட்டம் தொடர வேண்டும்" என்று நீங்கள் பிடிவாதம் பிடிக்கக் கூடாது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மகாபலிபுரம் விடுதியில் தங்க வைக்கப்பட்ட தவெக எம்எல்ஏக்கள் 10 பேர் மிஸ்ஸிங்? இறுதியில் தெரிந்த உண்மை
.

பாஜகவிற்கு சற்றும் சளைத்தவர் இல்லை விஜய்

திமுக அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் இன்னொரு நெட்டிசன் கூறும் போது, பாஜக எப்படியோ அதற்கு சற்றும் சளைத்தது கிடையாது விஜய் உருவாக்கி வைத்திருக்கும் ரசிகர்கள். ரெண்டுமே ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷத்தை கலந்தால் என்ன ஆகுமோ அதே நிலை தான். எல்லாவற்றையும் விட தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்க வேண்டும் என்றால் மேலே சொன்ன இரண்டும் ஆட்சிக்கு வரவேக் கூடாது
எல்லாவற்றையும் விட மாநிலத்தின் எதிர்காலம் முக்கியம் .

சித்திரம் வரைய முடியாது

அந்த தற்குறி கூட்டம் நியாயமான ஓட்டு வாங்கி வெற்றி பெறவில்லை என் பேத்தி சொல்லுச்சு ஓட்டு போட்டன் என் பேரன் சொன்னான் ஓட்டு போட்டன் என் குழந்தை அடம் பிடிச்சுச்சு ஓட்டு போட்டேன்னு போட்ட ஓட்டு தான் . அதெல்லாம் எப்படி ஒரு நல்ல தலைவனை தீர்மானிக்க முடியும். தற்போதைய முடிவு நம் தலைவரின் கையில் மட்டுமே உள்ளது. அதிமுக - திமுகன்னு மற்றவர்கள் பேசும் போது இரட்டை மனசா தான் இருக்கு ஏற்றுக் கொள்வதற்கு ஆனா அதுவே அந்த குரங்கு கூட்டம் கையில் அதிகாரம் சென்றால் தமிழ்நாடு என்ன ஆகும் என்று யோசிக்க.. அதைவிட பயமாக உள்ளது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.. தமிழ்நாடு தமிழ்நாடா இருக்கனும் அதற்கு தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+