மகாபலிபுரம் விடுதியில் தங்க வைக்கப்பட்ட தவெக எம்எல்ஏக்கள் 10 பேர் மிஸ்ஸிங்? இறுதியில் தெரிந்த உண்மை
சென்னை: ஆளுநர் மாளிகைக்கு விஜய் சென்றதால் ஆலோசனை கூட்டம் திடீரென்று நேற்று ரத்து செய்யப்பட்டது. எனவே, எம்.எல்.ஏ.க்கள் யாரும் பனையூர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம், உள்ளே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்களை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கவனித்துக்கொண்டார். நேரம் செல்ல, செல்ல அவர்களில் சிலர் அங்கு இல்லை இல்லை.. த.வெ.க. எம்.எல்.ஏ.க்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இரவில் திரும்ப வந்தனர்.
த.வெ.க. 108 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. விஜய் இரண்டு தொகுதியில் வென்றுள்ளதால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே 112 எம்எல்ஏக்கள் ஆதரவு அவருக்கு உள்ளது. இன்னும் 6 எம்எல்ஏக்கள் அல்லது ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் அவர் எம்எல்ஏ ஆக முடியும். ஏனெனில் ஒரு தொகுதி காலியானால், 233 ஆகிவிடும். அதன்படி பார்த்தால் 117 என்ற மேஜிக் எண்ணை எட்டினாலே இப்போதைக்கு போதும். அதாவது இன்னும் ஐந்து பேரின் ஆதரவு விஜய்க்கு வேண்டும். அவர் தனது தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இன்று அவர்கள் முடிவினை அறிவிப்பதாக கூறியிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் இன்று முடிவினை அறிவித்தால் 118எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை தந்துவிடுவார். அதன்பிறகு முதல்வராக விஜய் ஆகிவிடுவார். எந்த பிரச்சனையும் வராது. ஒரு வேளை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், விஜய்க்கு அதிமுகவை தவிர வேறு வழியில்லை என்கிற நிலை ஏற்படும். அல்லது திமுக அதிமுக சேர்ந்து ஆட்சிமையக்க முயற்சி நடக்கும் என்ற கற்பனையும் ஒருபுறம் ஓடுகிறது.
இப்படியான பரபரப்பான சூழலில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி மாமல்லபுரம் தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்கள். இதற்கிடையே, பனையூரில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாமல்லபுரம் விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் அழைத்து வரப்பட்டனர். சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் வீடுகளில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களும் வர உத்தரவிட்டிருந்தார்கள்.
அதே நேரத்தில், கவர்னர் மாளிகைக்கு விஜய் சென்றதால் ஆலோசனை கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. எனவே, எம்.எல்.ஏ.க்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம், உள்ளே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்களை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கவனித்துக்கொண்டார். நேரம் செல்ல, செல்ல அவர்களில் சிலர் அங்கு இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மாயமாகினர். இதுகுறித்து த.வெ.க. நிர்வாகிகள் கூறும்போது, எல்லோருமே சொல்லி விட்டுத்தான் வெளியே செல்கிறார்கள். அவர்களுக்கு எந்த கட்டுப்பாட்டையும் நாங்கள் விதிக்கவில்லை. உடனே வந்து விடுவார்கள் என்று தெரிவித்தனர். அதேபோல், இரவு 7 மணிக்கு மேல் அவர்களில் சிலர் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
இதற்கிடையே, கூட்டத்திற்கு மாமல்லபுரம் விடுதியில் இருந்து வந்த திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. திருப்பதி செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறும் போது, விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமையும். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒன்றாகும் என்பதெல்லாம் நடக்காத விஷயம், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகுமா?. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. எனவேதான் விடுதியில் தங்க வைத்துள்ளார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். வெளியூர் எம்.எல்.ஏ.க்கள் மட்டும் மாமல்லபுரம் விடுதியில் தங்குங்கள், மற்றவர்கள் சென்னையில் இருக்கும் வீடுகளில் தங்குங்கள் என்று எங்கள் கட்சி தலைமை கூறி விட்டது. எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை" என்றார்














Click it and Unblock the Notifications