விஜய் அவரது குழந்தையை கைவிடமாட்டார்.. திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க ஆதவ் அர்ஜுனா ஐடியா
திருச்சி: சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனை பிற கட்சியை சார்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். விஜய் அவரது குழந்தையை கைவிட மாட்டார் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் தலைவர் விஜய் போட்டியிட உள்ள நிலையில், அங்கு கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சை மார்க்கெட் சாலையில் உள்ள கிழக்கு தொகுதி அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (ஏப்ரல் 13) நடைபெற்றது.

இதில் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, டெல்டா மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரங்களை பொதுமக்கள் புறக்கணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் எங்கு குடிசைகள், போதைபொருள், சாராயம் அதிகமாக இருக்கிறதோ பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதோ அங்கு போட்டியிட முடிவெடுத்து பெரம்பூர் தொகுதியில் நின்றார். திருச்சியை ஏன் தேர்வு செய்தார் என்றால், வளர்ச்சி என்பது சென்னையை நோக்கி மட்டுமே இருக்கக் கூடாது.
அனைத்து இடங்களில் இருக்க வேண்டுமென்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் மத்திய மாவட்டமான திருச்சியை தேர்ந்தெடுத்து விஜய் இங்கு நிற்கிறார். நாளை தேர்தலில் வென்ற பிறகு திருச்சி கிழக்கு அவருடைய சொந்த குழந்தை போன்று இருக்கும். விஜய் தனது குழந்தையை கைவிட மாட்டார். இதனை சொல்லி மக்களிடம் வாக்கு கேளுங்கள்" என கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, இரு தலைவர்களும் தங்கள் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாக குற்றம்சாட்டினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் குடும்ப அலையாக மாறியுள்ளது என்றும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் மக்கள் ஆதரவு கிடைத்ததாகவும் கூறினார். மேலும், ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்கள் நலனுக்கான அரசியல் தான் முக்கியம் என்றும், தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் விஜய் பிரச்சாரம் செய்ய வருவார் எனவும், மக்கள் சந்திப்புகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெற்றி பெற்ற பின் எம்எல்ஏ அலுவலகம், மக்கள் குறை தீர்க்கும் மையமாக செயல்படும் எனவும், விரைவில் முழுமையான தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் எனவும் கூறினார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், தமிழகத்தில் வடநாட்டு அரசியல் எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து வருவதாகவும், ஜனநாயகத்திற்கேற்ற மாற்ற அரசியல் தேவையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒருவேளை விஜய் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அதில் ஏதேனும் ஒன்றில் ராஜினாமா செய்ய வேண்டும். சென்னையில் இருப்பது தான் வசதி என்று பெரம்பூரை தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இச்சூழலில் தான் ஆதவ் அர்ஜுனா விஜய் தனது குழந்தையை கைவிட மாட்டார் எனப் பேசியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications