நான் தீர்வு சொன்னால் சின்ன பையன்னு சொல்லிருவாங்க.. விஜய பிரபாகரன் கலகல!
திமுக ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் மாறாது என விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
சென்னை: பிரச்சனைகளுக்கு என்னை தீர்வு கேட்டால், என்னை சின்ன பையன் என்று சொல்லுவார்கள், ஆனால் என் கோபம் ஆளும் கட்சிமீதுதான் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து விஜய பிரபாகரன் தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன் சொன்னதாவது:
"எல்லோரையும் முன்னேற்றிவிடும் ஆசிரியர்கள் இன்று கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் கோரிக்கை நிறைவேற்றினால், வரும் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அவர்கள் கஷ்டப்படும்போது, நாம் மட்டும் புத்தாண்டு கொண்டாடுவது நல்லதல்ல.

நிலைமை மாறவில்லை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். நான் சின்ன வயசிலிருந்தே ஆசிரியர்களின் போராட்டத்தை பார்த்து கொண்டிருக்கிறேன். இப்படி பார்த்தே எனக்கு பழகியும் விட்டது. திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் இந்த நிலைமை மாறவில்லை.

ஹைதராபாத் வளர்ச்சி
இனிமேல் திமுக ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைமை மாற போவதும் கிடையாது. ஆனால் ஆசிரியர்கள் கஷ்டப்படுவதை பார்த்தால் மனசு சங்கடமாக இருக்கிறது. கல்வியில் ஹைதராபாத் நன்றாக வளர்ச்சி பெற்றுள்ளபோது, தமிழகம் மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது" என்றார்.

நான் சின்ன பையன்
இந்த பிரச்சனைக்கெல்லாம் தேமுதிக சார்பில் என்ன தீர்வு சொல்ல போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய பிரபாகரன், "நான் தீர்வு சொன்னால் என்னை சின்ன பையன் என்று சொல்லுவீர்கள். அதேபோல ஆட்சி மாற வேண்டும் என்று சொன்னாலும் என்னை சுயநலம் என்பார்கள்.

ஆளும் கட்சி
இந்த கேள்வியை இத்தனை வருஷம் ஆட்சியில் இருந்தவர்களைத்தான் நீங்கள் போய் கேட்க வேண்டும். ஆனால் என் குற்றச்சாட்டு திராவிடக் கட்சிகள் மேல் கிடையாது, அது ஆளும் கட்சி மீது தான்" என்று பதிலளித்தார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications