Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது மாநில பட்டியல்.. அடுத்து வரும் தேசிய பட்டியலில் என் பெயர் இருக்கும்! நம்பிக்கையை விடாத விஜயதரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியான நிலையில், அதில் பலருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இருப்பினும், விஜயதரணி பெயர் அதில் இடம்பெறவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இன்று தமிழ்நாடு பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதில் எல்.முருகன், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Vijayadharani Optimistic About BJP National Role Amid Tamil Nadu Political Shifts

பாஜக நிர்வாகிகள் பட்டியல்

அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதையும் மனதில் வைத்தே அனைத்து தரப்புக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நடிகை குஷ்புவுக்குத் தமிழக பாஜகவில் துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.. மேலும், சர்ச்சையில் சிக்கி 2021ல் பதவி விலகி கேடி ராகவனுக்கும் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மாநிலப் பிரிவு அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர சசிகலா புஷ்பா, எஸ்ஜி சூர்யா, வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோருக்கும் பொறுப்புகள் தரப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த லிஸ்ட்டில் சில முக்கியமான நபர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. குறிப்பாக சரத் குமார் பெயர் இதில் இடம்பெறவில்லை. அவர் கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியையே மொத்தமாகக் கலைத்துவிட்டு அதை பாஜகவுடன் இணைத்திருந்தார். அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சரத் குமாருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

விஜயதரணி பெயர் இல்லை

அதேபோல விஜயதரணிக்கும் கூட முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த இவர், 2024ல் அங்கிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். அப்போதே முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது பெயரும் இதில் இடம்பெறவில்லை.

நம்பிக்கையை விடாத விஜயதரணி

ஆனாலும் விஜயதரணி நம்பிக்கையாகவே இருக்கிறார். தற்போது மாநில அளவிலான பட்டியல் மட்டுமே வெளியாகி இருப்பதாகவும் விரைவில் தேசிய பட்டியல் வரும் என்றும் அதில் தனக்குப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக விஜயதரணி புதிய தலைமுறை டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தான் அவர் இந்த கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

அதாவது மாநில அளவிலான பட்டியல்தான் தற்போது வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள விஜயதரணி, தேசிய அளவிலான பட்டியல் இன்னும் வரவில்லை என்றும் நிச்சயமாக அதில் தனது பெயர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன் என்று விஜயதரணி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தேசிய தலைவர் மாற்றம் வரும்போது, தேசிய அளவில் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள். தேசிய அளவிலான பட்டியலில் நிச்சயம் எனக்கு வாய்ப்பு தருவார்கள். கட்சிக்குப் புதிதாக வந்த அனைவருக்கும் பொறுப்பு தர வேண்டி இருக்கும். இதனால் அடுத்த கட்ட பட்டியலில் நிச்சயம் இருக்கும்" என்றார்.

தவெகவில் ஐக்கியம்?

இதற்கிடையே பாஜக நிர்வாகிகள் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் விஜயதரணி அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் அவர் விஜய்யின் தவெகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது குறித்த தகவலை விஜயதரணி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தவெகவில் இணையும் செய்தியில் உண்மை இல்லை என்றும் அதை மறுப்பதாகவும் விஜயதரணி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+