எந்த குழப்பமும் வரக்கூடாது.. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள்.. தொண்டர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தேமுதிகவினர் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதனை எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
அனைத்து இடங்களிலும் தொண்டர்கள் போட்டியிட தயாராக இருக்க வேண்டும். மேலும், எந்தவொரு குழப்பத்திற்கும் இடமளிக்கக் கூடாது. வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் தேமுதிகவிற்கு முக்கியமான தேர்தலாக அமையும்.

வெற்றி வாய்ப்பு
உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளில் கழக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

சரியான முறை
உள்ளாட்சி தேர்தல் என்பது நமது கட்சிக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதால், சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள கழக தொண்டர்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், சட்டசபை தேர்தலாகட்டும் கூட்டணி தேர்வினால் தேமுதிக பெரும் சரிவை சந்தித்து வந்தது.

கூட்டணியில் குழப்பம்
கடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என தேமுதிக காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது. இதையடுத்து பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரனின் வாய் சவடால்களால் திமுகவுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமமுகவுடன் கூட்டணி வைத்தனர். கள்ளக்குறிச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட்டை இழந்ததுதான் மிச்சம்.

கொள்ளைகள் வெவ்வேறு
கட்சிகள் கோட்பாடுகள், கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும் விஜயகாந்த் மீது ஸ்டாலினுக்கு தனி பாசம் உள்ளது. இதைத்தான் அவர் நேரடியாகவே சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று நலம் விசாரிப்பு மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அது போல் தேமுதிகவில் இருந்து யார் வந்தாலும் திமுகவில் சேர்க்க வேண்டும் என்றும் எனது நண்பர் விஜயகாந்த் மனம் வேதனைப்படக் கூடாது என்றும் தனது மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

திமுக கூட்டணி
தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெறும் என தெரிகிறது. தேமுதிக இழந்த பழைய செல்வாக்கில் சிறிதேனும் மீட்டு கொடுக்க திமுக உதவும் என தெரிகிறது. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் என விஜயகாந்த் தொண்டர்களை அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications