விஜயகாந்த்தா இது.. குழந்தையாக மாறி காட்சி தந்த "கேப்டன்".. ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த மக்கள்!
இருபுறமும் உள்ள தொண்டர்களை பார்த்து விஜயகாந்த் கையசைத்தவாறே வருகிறார்.
Recommended Video
சென்னை: கறார், கண்டிப்பு தன்மையுடன் ரெட் கலர் கண்களை உருட்டி மிரட்டி காட்டியதுடன், லெப்ட் காலை தூக்கி ரைட்டில் எகிறி எகிறி உதைத்த விஜயகாந்த், இன்று பார்ப்பதற்கே குழந்தையாக தெரிகிறார்.
சென்னையில் இன்றும், நாளையும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய போகிறார். அதற்காக அவர் சாலிகிராம் வீட்டிலிருந்து கிளம்பி ஊர்வலமாக பிரச்சாரக் களத்திற்குச் சென்றார்.
பிரச்சார வேனின் முன்பக்கத்தில் விஜயகாந்த் உட்கார்ந்திருக்க, இரு பக்கமும் மக்கள் அவரை பார்த்தனர். ஆனால் விஜயகாந்த் வேனில் இருந்த வெளிச்சம் காரணமாகவோ என்னவோ, குத்துமதிப்பாக இப்படியும், அப்படியும் திரும்பி கை காட்டினார்.

குழந்தையாக
மக்களை அவரால் குறிப்பிட்டு பார்க்க முடியவில்லை என்றே தெரிகிறது. கைகளை உயர்த்தி பொதுமக்களுக்கு கையசைப்பதை பார்த்தால், கம்பீரம் தெரியவில்லை.. மாறாக ஏதோ குழந்தை தனமே தென்படுகிறது.

பேசிக் கொண்டே வந்தார்
உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும், விஜயகாந்த் பார்க்க தெளிவாக இருக்கிறார். அவருக்கு பின்புறம் உள்ளவர் விஜயகாந்த் காதில் ஏதோ சொல்லிகொண்டே வருகிறார். பிறகு விஜயகாந்த் பக்கத்தில் உள்ள டிரைவரிடம் என்னமோ பேசுகிறார்.

வணக்கம் சல்யூட்
குளிர் கண்ணாடியை கழட்டி பின்னர் மாட்டினார். மறுபடியும் கழற்றி கையில் வைத்துக் கொண்டார். சாலையில் திரும்பிப் பார்த்து மக்கள் இருந்தால் கையை எடுத்துக் கும்பிடுகிறார். சல்யூட் வைத்தார். ஒரு பெரும் ஆச்சரியத்துடன் சென்னையை அவர் தரிசனம் செய்தது போலவே இருந்தது. காரணம், சென்னையை இப்படி விஜயகாந்த் சுற்றிப் பார்த்தே பல காலமாகிறது என்பதால்.

அனுதாபத்துடன் மக்கள்
எப்படி, எப்படியோ பார்த்து வியந்த விஜயகாந்த்தை இப்படி பார்ப்பது என்னவோ போல் இருந்தாலும், கேப்டனை பார்த்த சென்னை மக்களுக்கு மனசுக்கு ஏதோ சந்தோஷமாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications