மத்தாப்ப சுட்டு சுட்டு போடட்டுமா.. குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய விஜயகாந்த்.. புதுவரவும் இருக்கே!
சென்னை: மனைவி, மகன்கள், குட்டி பப்பியுடன் மத்தாப்பை கொளுத்தி தீபாவளி பண்டிகையை விஜயகாந்த் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்தில் ஹீரோதான். இல்லாதவர்களுக்கு கை நிறைய அள்ளிக் கொடுப்பவர். தான் மட்டுமின்றி தனது ரசிகர்கள் மூலமும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இதனால் விஜயகாந்த் என்றாலே தேமுதிக கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்லாது நடுநிலையானவர்களுக்கும் அவரைப் பிடிக்கும். அவருக்கு நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லை. இதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகைப்படங்கள்
இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், பிறந்த நாள், கட்சி விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்படுவதால் அதை பார்க்கும் ரசிகர்களும் தொண்டர்களும் நீண்ட நாளுக்கு பிறகு கேப்டனை பார்க்கும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

மகன்கள்
அவ்வப்போது தமிழர்களின் நலம் சார்ந்த விஷயத்திலும் விஜயகாந்த் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் தன் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் தனது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.

அட்டகாசம்
விஜயகாந்திற்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த புகைப்படத்தில் புதிதாக ஒரு குட்டி பப்பியும் புதுவரவாக இடம் பெற்றுள்ளது. நான்கு பேருமாக சேர்ந்து பெரிய மத்தாப்பை சுற்றி தீபாவளியை கொண்டாடினர். விஜயகாந்த் பச்சை நிறத்தில் சட்டையும் பட்டு வேட்டியும் அணிந்திருந்தார்.

அதே குழந்தை சிரிப்பு
அவருக்கு மேட்சிங்காக பிரேமலதாவும் பச்சை நிறத்தில் பட்டு புடவை அணிந்திருந்தார். கேப்டனையும் அண்ணியாரையும் பார்த்த ரசிகர்களும், தொண்டர்களும் கேப்டனை எப்போது நேரில் காண்போம் என எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை யொட்டி தேமுதிக தலைமையில் 3ஆவது அணி அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications