Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமழிசைக்கு மாறும் மார்க்கெட்.. கோயம்பேடு வியாபாரிகள் கதி?.. துக்ளக் ஆட்சி என்கிறார் விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டால், இங்கு சொந்தமாக கடைகளை வாங்கி உள்ள வியாபாரிகளின் நிலைமை என்னவாகும்? என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய காய்கறி சந்தையாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை திகழ்கிறது. 85 ஏக்கர் பரப்பளவில் இந்த காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 12 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இந்த சந்தையில் பராமரிப்பு பணிக்காக மட்டுமே 11 கோடிக்கு மேல் மாநகராட்சி செலவிட்டு வருகிறது.

Vijayakanth condemns Koyambedu market to be replaced by Tirumazhisai

இதனால், கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் மாநகராட்சிக்கு பெரிய அளவில் வருமானம் இல்லை. மேலும், கனரக வாகனங்கள் வந்து செல்வதால் அப்பகுதியில் அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அதிரடி நடவடிக்கையாக சந்தையை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் கோயம்பேடு சந்தையில் அதிக மக்கள் கூடுவதை தடுக்க திருமழிசை பகுதியில் காய்கறி சந்தை தற்காலிகமாக தொடங்கப்பட்டது. அந்த வகையில், தற்போது முழுவதுமாக அங்கு காய்கறி சந்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனம் மூலம் சிஎம்டிஏ முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

திருமழிசை சந்தை அமைக்கும் பகுதியில் சுமார் 30 ஏக்கர் திறந்த வெளிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம், நட்சத்திர ஹோட்டல், பொழுதுபோக்கு பகுதிகள் என பிரமாண்டமாக தயார் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிஎம்டிஏவால் நியமிக்கப்பட்டுள்ள குஷ்மேன், வேக் பீல்டு ஆகிய நிறுவனங்களிடம் பிரமாண்ட சந்தையின் வடிவமைப்பை தயார் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், அந்த பகுதியை சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உணவகங்களுக்கு பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் முதல் மற்றும் 2-ம் பகுதியை இணைக்கும் பகுதியாக உள்ளது. இதனால், புதிய திட்டத்தால் மக்களை கவரும் இடமாக கோயம்பேடு விரைவில் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு கடைகளை மொத்த வியாபாரிகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள். அந்த வியாபாரிகளை திருமழிசைக்கு மாற்றும் போது இழப்பீடு தொகை வழங்க சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. சந்தையை இடம் மாற்றி நவீனப்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், திறந்த வெளிப்பகுதிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டலாம். திருமழிசையில் புதிய சந்தை, கோயம்பேட்டை நவீனப்படுத்துதல் உள்ளிட்டவை மூலம் சென்னையின் வடமேற்கு பகுதிகள் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தை இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட் என பெயர் பெற்ற சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு உள்ளது. மேலும் அந்த இடத்தில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்க முடிவு செய்துள்ளது.

லாப நோக்கத்திற்காக கோயம்பேடு மார்க்கெட் மாற்ற திட்டமிட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கோயம்பேடு மார்க்கெட்டை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டால், இங்கு சொந்தமாக கடைகளை வாங்கி உள்ள வியாபாரிகளின் நிலைமை என்னவாகும்? மேலும் கோயம்பேடு மார்க்கெட்டை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

கோயம்பேடு மார்க்கெட் சென்னையின் முக்கிய இடத்தில் இருப்பதால், சென்னைவாசிகள் எந்தவித சிரமமின்றி காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். மேலும் வியாபாரமும் அதிகளவில் நடைபெறுவதால் வியாபாரிகளும் நல்ல லாபத்தை பார்த்து வருகின்றனர்.

ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்பட்டபோது, வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். அதனால் இந்த மாற்று யோசனை என்பது நிச்சயம் பலன் அளிக்காது.

எனவே கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றினால் வியாபாரிகளும் பொதுமக்களும், பல்வேறு இன்னல்களையும் கஷ்டங்களையும் சந்திக்க நேரிடுமே தவிர வேறு எந்தவித ஆதாயமும் ஏற்படாது.

சென்னையின் அடையாளமாக திகழும் கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உடனடியாக கைவிட வேண்டும். வணிகர்கள் மற்றும் அதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இல்லையென்றால் அரசின் இந்த நிலை துக்ளக் ஆட்சியுடன் ஒப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். எனவே யாருக்கும் பலனளிக்காத இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+