எங்க வந்து செல்பி எடுக்குற! டிடிஎஃப் வாசன் அலப்பறையால் விஜயகாந்த் ரசிகர் கோபம்.. எஸ்ஸான மஞ்சள் வீரன்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த டிடிஎஃப் வாசனுடன் ரசிகர்கள் செல்பி எடுத்ததை பார்த்த தொண்டர் ஒருவர் அவர்களை விரட்டி அடித்த காட்சி பெரும் வைரலாகி வருகிறது.
கேப்டன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடிப்பிலும் அரசியலிலும் நேரடியாக ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் அவருக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாத நிலையில் அவருடைய கால்களில் விரல்கள் நீக்கப்பட்டன.

இதையடுத்து அவ்வப்போது விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதும், அவர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி விஜயகாந்துக்கு காய்ச்சல், சளி, இருமல் தொல்லையால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் மூச்சுதிணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார். அவரது மறைவால் திரைத்துறையினரும் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது உடல் அடுத்த நாள் 29ஆம் தேதி தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் மக்கள் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் டிடிஎஃப் வாசன் உள்பட மஞ்சள் வீரன் குழுவினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வெளியே வந்த டிடிஎஃப் வாசனை பார்த்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்தனர். இதை அங்கிருந்தபடியே விஜயகாந்தின் ரசிகர் ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
உடனே கடுங்கோபமடைந்த அவர், செல்பி எடுக்குற இடமா இது, யாரா இருந்தாலும் அடிச்சிடுவேன் பாத்துக்கோங்க என கத்தினார். இதை பார்த்ததும் டிடிஎப் வாசன் ஒன்றும் தெரியாதது போல் ஷூ வை மாட்டிக் கொண்டு அங்கிருந்து நழுவினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications